சென்னை: கரூர் சம்பவத்தால் வீட்டோடு முடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், சமீபத்தில் கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து பேசினார். இந்த நிலையில் அடுத்தடுத்த அரசியல் பணிகளில் அவர் இறங்கவுள்ளதால் தவெக தொண்டர்களிடையே புதிய நம்பிக்கையும், உற்சாகமும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெற்றிக் கழகம் தலைவர் விஜய், நவம்பர் 5 ஆம் தேதி மாமல்லபுரத்தில் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள், வரவிருக்கும் செயல்பாடுகள், கட்சியின் எதிர்கால திட்டங்கள், மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பு, ஒரு மாதத்திற்கு முன்பு கரூர் அருகே நடந்த விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவத்திற்குப் பிறகு வந்துள்ளது. அந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, கட்சி ஒரு வார காலத்திற்கு மௌன அஞ்சலி செலுத்தியதுடன், பொது நிகழ்ச்சிகளையும் குறைத்துக் கொண்டது. தற்போது விஜய் மீண்டும் ஆக்கப்பூர்வமான அரசியலுக்குத் திரும்புவதால் கட்சியினர் மத்தியில் புதிய நம்பிக்கை எழுந்துள்ளது.

முன்னதாக இதுதொடர்பாக தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், விஜய், "சதி செய்பவர்கள் மற்றும் சூழ்ச்சிக்காரர்கள்" கட்சியைக் குறைத்து மதிப்பிடவும், அவதூறு பரப்பவும் முயன்றாலும், தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக அவர்களுடன் நிற்பதாகக் கூறினார். "நமது தாய்நாடான தமிழ்நாட்டின் மக்களுக்காக குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது" என்றும், மக்களின் ஆதரவு வலுவாக இருக்கும் வரை கட்சியின் பயணத்தை நிறுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய், உறுப்பினர்களை அடுத்த கட்ட நடவடிக்கைகளை "கவனத்துடனும், கணக்குடனும், தெளிவாகவும்" எடுக்க வலியுறுத்தினார். மேலும், சிறப்பு கூட்டத்தில் ஒற்றுமையுடன் கூடி எதிர்காலத்திற்காக உறுதியான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த அறிவிப்பு, கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாமல் விஜய் தரப்புப் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கியமாகும். அது நடந்தால்தான் விஜய்யின் அரசியல் பாதை எளிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைக்கு மழை வருமா வராதா? எங்கெல்லாம் மழை வரும்... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் எதிரி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒன்றிணைந்து பகிரங்க பேட்டி
கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
இந்தியாவில்.. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 லட்சம் பெண் பிரதிநிதிகள்.. பி.வில்சன் பெருமிதம்
திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி: நயினார் நகேந்திரன் வேதனை!
தேவர் ஜெயந்தி விழா... முத்துராமலிங்க தேவருக்கு மனமார்ந்த அஞ்சலி: பிரதமர் மோடியின் பதிவு!
சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா முத்துராமலிங்கத் தேவர்: விஜய்
கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு: அண்ணாமலை
{{comments.comment}}