சென்னை: விஜய்யை எங்கள் அப்பாவாக, அண்ணனாக, எங்கள் உயிராக நினைக்கிறோம் என்று கல்வி விருது வழங்கும் விழாவில், எம்எல்ஏ வேல்முருகனின் கொச்சை பேச்சிற்கு பதில் அளித்து அரங்கத்தை அதிர வைத்துள்ளார் விருது பெற்ற மாணவி ஒருவர்.
கடந்த இரண்டு வருடங்களாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார் நடிகர் விஜய். அந்த வகையில் மூன்றாவது வருடமாக 2025 ஆம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா மூன்று கட்டங்களாக நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, முதல் இரண்டு கட்டங்கள் முடிந்த நிலையில், இன்று 3 கட்ட விருது வழங்கும் விழா சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தொடக்கத்தில் விமான விபத்தில் உயிரழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் பேசிய விஜய், இன்றைய நிகழ்ச்சியில் பேச்சை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். யாரும் இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 2026 ஆம் ஆண்டு தேர்தல் பற்றியோ, என்னை காமராஜர், இளைய காமராஜர் அப்படி எல்லாம் ஏதும் சொல்லாதீர்கள். நீங்கள் உங்களுடைய ஆசிரியர்கள், உங்கள் பள்ளி பற்றி பேசுங்கள். மற்ற விஷயங்கள் பற்றி பேசுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களின் தோள்களில் கைகளை போட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்து வருகிறார் விஜய். இதனால் அந்த மாணவ மாணவியர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். இதனை பெரும்பாலானவர்கள் நல்லவிதமாகவே பார்க்கின்ற நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மட்டும் கொச்சையாக பேசியிருந்தார். அவர் பேசுகையில்,
ஒரு நடிகர் 2 கிராம் தங்கம் பரிசாகக் கொடுத்தவுடன், சில முட்டாள்கள் தங்கள் பெண் குழந்தைகளை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஒரு தமிழனுக்கு சாதாரண அறிவு கூட இல்லையா?. உன்னால் பிறந்து, வளர்ந்து, வளர்க்கப்பட்ட அந்தப் பெண் - நாளை யாரோ ஒருவரின் மனைவியாக வாழப் போகிறவள் - அவளை உன் அப்பா, அம்மா முன்னிலையில், ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் முன்னிலையில், ஒரு சினிமா நடிகரை கட்டிப்பிடித்து முத்தமிட அனுமதிக்கிறாய்... இது என்ன மாதிரியான கீழ்த்தரமான பிறப்பு? என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று விருது பெற்ற மாணவி பேசுகையில், விஜய்யை நாங்கள் அப்பாவாக, அண்ணனாக, எங்கள் உயிராக தான் நினைக்கின்றோம். உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் அப்பா என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து மற்றொரு மாணவியின் தாய் பேசுகையில், விஜய் சார் அரவணைப்பதை அசிங்கப்படுத்துவதா? அவர் எங்களுக்கு எல்லாம் தாய் மாமன் சார். தாய் மாமன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் அதில், ஒரு அன்பு, ஆசை, அக்கறையும் இருக்கும். அப்படி தான் நாங்கள் விஜய் சாரை பார்க்கிறோம். அதில் எங்களுக்கு ஒரு கபடமும் இல்லை. பெண் பிள்ளைகளை தன் பிள்ளைகள் போல் பார்க்கும் இந்த மனிதர் அரசியலுக்கு வந்தார் என்றால், காந்தியடிகள் சொன்னது போல், நடு இரவில் தனியாக ஒரு பெண் மற்றும் பெண் பிள்ளைகள் நடந்து செல்லலாம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
உருவம் முக்கியமல்ல, கடமையே முக்கியம்.. Conversation between minute and hour
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
What is yourss is Yours.. உனக்கானது உன்னை வந்தடையும்!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
Porselvi Rajan Tamil Poem: வெயிலோடு விளையாடி!
Deepa Ravi Poem: வேறெதுவும் தேவையில்லை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
{{comments.comment}}