வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

Apr 04, 2025,06:48 PM IST

சென்னை: இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம். இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக  எப்போதும் இருப்போம் என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.


வக்பு வாரிய திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வக்பு வாரிய திருத்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதவிற்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நேற்று தவெக தரப்பிலும் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 




இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், ஜனநாயக அவையில் வக்பு வாரிய திருத்த மசோதா பற்றி விவாதிக்க போதுமான இஸ்லாமியர் உறுப்பினர்கள் இல்லை. இது தான் பாஜக அரசு நிறுவியுள்ள மிக மோசமான பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல். அதுமட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வக்பு வாரிய திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.


அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சென்னை பனையூரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி  ஆனந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். வந்தோம், போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம். 


வக்பு சொத்துகளில் ஏன் மத்திய அரசு தலையிட வேண்டும். பாஜக செய்வது அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பாக உள்ளது. இந்த சட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று இஸ்லாமியர்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் அச்சம் தவெகவிற்கு நன்றாக தெரியும். இந்த சட்ட  மசோதவை ஒன்றிய அரசு  திரும்ப பெற வேண்டும். மக்கள் தேர்ந்தெடுத்த அரசு மக்கள் விரும்பப்படி தான் செயல்பட வேண்டும். இஸ்லாமியர்களுக்கு தவெக உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்