Exit Poll: தவெகவுக்கு 98 முதல் 120 இடங்கள் வரை கிடைக்கும் - ஆக்ஸிஸ் மை இந்தியா (இந்தியா டுடே)

Apr 29, 2026,08:15 PM IST

சென்னை: எக்ஸிட் போல்களில் முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சாதகமான முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.


இந்தியா டுடேவுக்காக, ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தவெக 98 இடங்கள் முதல் 120 இடங்கள் வரை பெற்று முதலிடத்தைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகளிலையே இதுதான் தவெகவுக்கு முதலிடம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்கள் வரை பெறும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. 


அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில் 22 முதல் 32 இடங்கள் வரை பெறும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.




இதுவரை வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளில் இரண்டு கருத்துக் கணிப்புகளில் தவெகவுக்கு குறைந்தபட்சம் ஒறறை இலக்கத்தில் சீட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்துமே  இரட்டை இலக்கத்தையே கணித்துள்ளன. அதிலும் பீப்பிள்ஸ் இன்சைட் கருத்துக் கணிப்பில் தவெகவுக்கு குறைந்தது 30 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது ஆக்ஸிஸ் மை இந்தியா ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு தவெக உருவெடுக்கும் என்று கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்