சென்னை : உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவிற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, பிறகு உடல் நலம் தேறினார் நடிகர் ரோபோ சங்கர். சில நாட்கள் ஓய்விற்கு பிறகு, உடல் மெலிந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க துவங்கினார். கடந்த 2 நாட்களுக்கு முன் சினிமா ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்தார் நடிகர் ரோபோ சங்கர். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து, வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட ரோபோ சங்கரின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் உடனடியாக நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தர்ராஜன், அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினி காந்த், டி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டனர். இந்நிலையில் இன்று காலை தவெக தலைவரும், நடிகருமான விஜய், ரோபோ சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர். நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாகையில் நாளை விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள இடம் மாற்றம்
தங்கம் விலை நேற்று போல் இன்று இல்லை... மீண்டும் உயர்ந்தது... கவலையில் வாடிக்கையாளர்கள்
ரோபோ சங்கரோட மறைவு வேதனையா இருக்கு.. தவெக தலைவர் விஜய் இரங்கல்
கிழக்கு ரஷ்யாவை அதிர வைத்த பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் சந்தோஷம்.. டிஏ உயர்வு மற்றும் 8வது ஊதியக் குழு!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 19, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்
Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்
Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!
சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
{{comments.comment}}