மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு தவெக தலைவர் விஜய் பேசவுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், மனிதநேயம் மற்றும் மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் இன்று பிரம்மாண்டமான சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா நடைபெறவுள்ளது.
இன்று காலை 10.30 மணி்கு மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டல் வளாகத்தில் இந்த கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசியலில் மாற்றுப் பாதையை நோக்கி பயணிக்கும் தமிழக வெற்றிக் கழகம், அனைத்து மதத்தினரிடையேயும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் நேரடியாகக் கலந்து கொண்டு, கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுடன் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட உள்ளார். இது கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் வருகிறார் என்றாலே கூட்டமும் தன்னாலே கூடி விடுகிறது. இதைச் சமாளிப்பதுதான் விஜய்க்கு பெரும் தலைவலியாகவும் உள்ளது. எனவே கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்பான முறையில் விழாவை நடத்தவும் கட்சித் தலைமை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது:
விழாவில் பங்கேற்க ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்களுக்கு பிரத்யேக QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரப்பூர்வ QR குறியீடு அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே விழா நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த்
கேட்டுக் கொண்டுள்ளார். மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் இந்தச் சமத்துவ விழா, தமிழகத்தின் சகோதரத்துவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும் என்று தவெக தெரிவித்துள்ளது.
இன்றைய கொண்டாட்டத்தில் விஜய் என்ன பேசுவார் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முன்பு ரம்ஜான் இப்தார் விருந்தில் விஜய் மத ரீதியான முறையில் கலந்து கொண்டார். தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்தம் அடைகிறது மனம்.... அனுபவத்தில்!
ஓ.. கணிதமே... நீ இல்லையேல் ஒன்றுமே இல்லை.. தேசிய கணித தினம்
மார்கழி மாதம் மட்டுமே காட்சி தரும்.. மரகதலிங்க தரிசனம்.. திருச்செங்கோடு!
நாரணஹரியை நாளும் பணிந்து .. நற்பாதம் உய்வோமே!
அவள் தான் எங்கள் ஆனந்தஜோதி...!
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
Christmas: தவெகவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. மாமல்லபுரத்தில் இன்று விஜய் பேச்சு!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 22, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்
மார்கழி 07ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 07 வரிகள்
{{comments.comment}}