விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?

Apr 28, 2026,11:03 AM IST

சென்னை : தவெக தலைவர் விஜய் இன்று அதிகாலை திடீரென திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளார். விஜய் எதற்காக திருச்செந்தூர் சென்று விட்டு வந்துள்ளார்  என அரசியல் வட்டாரங்கள் பரபரத்துக் கொண்டிருக்கையில், ஆன்மீக ரீதியாக பல விஷயங்களை அலசி ஆராய்ந்து, விபரம் அறிந்தவர்களோ இந்த நாளில் திருச்செந்தூருக்கு செல்லும் படி நாள் குறிச்சு கொடுத்த ஜோசியர் யார் என நெட்டிசன்கள் பரபரத்துக் கொண்டிருக்கிறார்கள்.


தமிழக சட்டசபை தேர்தல் 2026 முடிவுகள் வெளியாக இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக தவெக தலைவர் விஜய், அதிகாலையிலேயே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்துள்ளார். அதிலும் கையில் வேலுடன் சென்று, முதல் தரிசனமான விஸ்வரூப தரிசனம் செய்து விட்டு வந்துள்ளார். விஜய் குறிப்பிட்ட இந்த நாளில் திருச்செந்தூர் சென்றுள்ளது தான் தற்போது பலரையும் பதபதைக்க வைத்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது திருச்சிக்கு பிரச்சாரம் செய்த போது தேவாலயத்தில் மண்டியிட்ட படி நடந்து சென்று வழிபாடு செய்தார். இப்போது தேர்தல் முடிந்த பிறகு திருச்செந்தூர் சென்றுள்ளார்.


திருச்செந்தூர் சிறப்புகளும், இன்றைய சிறப்பும் :




- முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் என்பது சூரனை வதம் செய்து, தேவர்களை காத்த தலம். இது வெற்றி தரும் தலமாக கருதப்படுகிறது.

- திருச்செந்தூர் சென்றால் தலையெழுத்து மாறும். கேட்ட வரங்களை முருகன் அள்ளிக் கொடுப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

- ஏப்ரல் 28ம் தேதியான இன்று மதுரை மீனாட்சி திருக்கல்யாண தினம். 

- முருகப் பெருமானுக்குரிய செவ்வாய் கிழமையும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாள்.

- உத்திரம் நட்சத்திரம் முருகப் பெருமானுக்குரியதாக இருந்தாலும், இந்த நட்சத்திற்கு அதிபதி சூரிய பகவான். ஒருவருக்கு அரச பதவி, தலைமை பதவி, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றால் அதற்கு சூரிய பகவானின் அருள் மிக மிக அவசியம். 

- எந்த கோவிலாக இருந்தாலும் அதிகாலையில் கோவில் நடை திறந்ததும் செய்யப்படும் முதல் தரிசனத்திற்கு விஸ்வரூப தரிசனம் என்று பெயர். இது திருச்செந்தூரில் மிகவும் விசேஷமான தரிசனங்களில் ஒன்று. மற்ற நேரங்களில் சாமி தரிசனம் செய்வது என்பது நாம் இறைவனை சென்று பார்ப்பது. ஆனால் விஸ்வரூப தரிசனம் என்பது இறைவன், நம்மை பார்க்கும் அற்புத தரிசனமாகும். இந்த தரிசனத்தின் போது முருகனிடம் என்ன வேண்டுதல் வைத்தாலும் நினைத்த காரியங்களை முருகன் நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை.


யார் அந்த ஜோசியர்?


இத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்து, கணித்து, இந்த நாளில் திருச்செந்தூரில் சென்று சாமி தரிசனம் செய்யுங்கள் என விஜய்க்கு நாள் குறித்து கொடுத்த அந்த ஜோசியர் யார் என்பது தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாக விவாதிக்கப்பட்டு வருகிறது. விஜய், ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன் இவ்வளவு துல்லியமாக கணிக்கப்பட்ட நாளில் திருச்செந்தூர் போய் விட்டு வந்துள்ளார் என்றால், விஜய் இப்போதே தேர்தல் முடிவுகளை கணித்து விட்டாரா? அல்லது ரகசிய தகவல் ஏதாவது அவருக்கு கிடைத்து விட்டதா? அதனால் தான் அட்வாசாக சென்று திருச்செந்தூர் முருகனுக்கு நன்றி சொல்லி விட்டு வந்துள்ளாரா என்றும் பலரும் சோஷியல் மீடியாவில் கேட்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என் இதயம் முழுமையும் நிரம்பியுள்ளாய்.. அவளின் (ல்) அவன்! (11)

news

துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரின் பெரிய வேன் முன் செல்ல.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 3)

news

விஜய்யின் திடீர் திருச்செந்தூர் விசிட்...யாருப்பா அந்த ஜோசியர்?

news

meenakshi thirukalyanam 2026 மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் 2026 கோலாகலம்

news

தமிழகச் சட்டசபை தேர்தல் 2026: மே 4 வாக்கு எண்ணிக்கை - வழிமுறைகளை வெளியிட்ட தேர்தல் கமிஷன்

news

புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

news

இதயம் என்னும் கவிதை...!

அதிகம் பார்க்கும் செய்திகள்