கனடாவில் புதிய அமைச்சரவை.. 2 இந்திய வம்சாவளி பெண்களுக்கு இடம்.. மொத்தம் 2 தமிழர்களுக்கு வாய்ப்பு!

Mar 16, 2025,09:52 AM IST

டோரன்டோ: கனடா நாட்டின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது.


கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்து வந்தார். சமீபத்தில் அவர் பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டார். மார்க் கார்னியும் அவரது  தலைமையிலான அமைச்சரவையும்  பதவியேற்றுள்ளது.




முதலில் மார்க் கார்னி பிரதமராக பதவியேற்றார். இதையடுத்து அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த அமைச்சரவையில் 3 பேர் முக்கியமாக பார்க்கப்படுகிறார்கள். 3 பேரில் 2 பேர் இந்திய வம்சாவளியினர். அதில் இரண்டு பேர் தமிழ் வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.


முதல் அமைச்சரின் பெயர் அனிதா ஆனந்த். இவர் அறிவியல், புத்தாக்கம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். இன்னொருவர், கமால் கெரா. சுகாதாரத் துறை அமைச்சராக கமால் கெரா பதவியேற்றுள்ளார். இருவரும் இந்திய வம்சாவளியினர் ஆவர்.


இவர்கள் தவிர ஈழத்தை பூர்வீகமாக கொண்ட தமிழரான சத்தியசங்கரி கேரி அனந்த சங்கரியும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். 


தமிழ் பஞ்சாபி வம்சாவளி அனிதா ஆனந்த்




கனடா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அனிதா ஆனந்த்தின் பெற்றோர் தமிழ்- பஞ்சாபி பூர்வீகத்தைக் கொண்டவர்கள் ஆவர். அந்த வகையில் அனிதா ஆனந்த் பாதி தமிழர் ஆவார். 


அனிதா ஆனந்த்தின் தந்தை எஸ்.வி. ஆனந்த் ஆவார். தாயார் பெயர் சரோஜ் ராம். தந்தை தமிழர், தாயார் பஞ்சாபி ஆவார். அனிதா ஆனந்த்துக்கு கீதா ஆனந்த் என்ற அக்காவும், சோனியா ஆனந்த் என்ற தங்கையும் உள்ளனர். அனிதா ஆனந்தின் பெற்றோர் தீவிர காந்தியவாதிகள் ஆவர். 1985ம் ஆண்டு அனிதாவின் பெற்றோர் கனடாவுக்கு இடம் பெயர்ந்து செட்டிலானார்கள். அனிதா ஆனந்த் பிறந்தது கென்ட்வில்லி நகரில். 57 வயதாகும் அனிதா ஆனந்த்தின் முழுப் பெயர் இந்திரா அனிதா ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.


டெல்லி பெண் கமால் கெரா




கனடா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இன்னொரு இந்திய வம்சாவளி தலைவரான கமால் கெரா, 36 வயதேயான கமால் கெரா, டெல்லியில் பிறந்தவர் ஆவார்.  இவரும் பஞ்சாபி வம்சாவளிதான். கனடா நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் இளைய வயது எம்பிக்களில் இவரும் ஒருவர் ஆவார்.  கடந்த 2015ம் ஆண்டு இவர் பிராம்ப்டன் மேற்கு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். நர்ஸிங் பணியில் ஈடுபட்டிருந்தவர் கமால் கெரா. சிறந்த செயல்பாட்டாளர்.  தற்போது அவருக்கு சுகாதாரத் துறையே கொடுக்கப்பட்டுள்ளதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் கமால் கெரா.


இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு நர்ஸாக, சுகாதாரத் துறையை மிகவும் சிறப்பாக பராமரிப்பேன். இந்தத் துறையின் சிரமங்கள், அதன் தேவை என்ன என்பது எனக்கு தெரியும். எனவே சிறப்பாக  செயல்பட முடியும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் கமால் கெரா.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

news

நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!

news

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்