- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி.
ஒரு வார காலமாக அந்த வீட்டில் அப்படி ஒரு மௌனம். அந்த வீட்டின் மௌனத்தில் , ஓடும் கடிகாரத்தின் டிக் டிக் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. புயலுக்குப் பின் வந்த அமைதி நிலவியது.
சேகர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர். சுமதி ஒரு அரசு பள்ளி ஆசிரியை. பத்து வருடத் திருமண வாழ்க்கை. ஒரு அழகான பெண் குழந்தை 'ரதி' அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், கடந்த ஒரு வாரமாக அந்தச் மகிழ்ச்சியில் ஒரு விரிசல். காரணம்? இருவரின் ஈகோ.
ஒரு ஞாயிறு காலை, மிகச் சாதாரணமாகத்தான் பேச்சு ஆரம்பித்தது. "இந்த வாரம் என் அம்மா வீட்டுக்குப் போகலாம்" என்றாள் சுமதி.
"இப்ப என்ன . இரண்டு மாதம் முன்பு தானே போய் வந்தாய். எனக்கு வேலை இருக்கிறது, அடுத்த வாரம் பார்க்கலாம் " என்றான் ராகவன்.
"எப்போதுமே உங்கள் சௌகரியப்படிதான் நாங்கள் போக வேண்டுமா. ? என் இஷ்டப்படி போகக்கூடாதா.? "என்று சுமதி கேட்ட கேள்வி, ராகவனின் ஈகோவைத் மேலும் தீண்டியது.

"ஆமா. என் இஷ்டப்படி தான் போகணும் .நீ நினைச்சபடியெல்லாம் போக முடியாது."
இந்த வார்த்தை சுமதியின் ஈகோவை முடிக்கி விட்டு ,ஏதேதோ வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டு ,பெரிய சண்டையில் முடிந்தது. அன்று இரவு ஆரம்பித்த மௌன விரதம், இன்று ஏழாவது நாளாக தொடர்கிறது.
அந்த மௌனம் அவர்களுக்கு இடையே சீனப் பெருஞ்சுவராய் நீண்டு கொண்டிருந்தது. சேகர் தன் சட்டையைத் தானே தேய்த்துக் கொண்டான். சுமதி அவனுக்குப் பிடித்த காபியைப் போடாமல், தனக்கு மட்டும் போட்டுக் கொண்டாள். ஒரு வாரமாக இதே கதை தான்.
இருவரும் ஒரே கட்டிலில் படுத்திருந்தாலும், நடுவே இமயமலை போன்ற ஒரு 'ஈகோ' சுவர் எழுந்து நின்றது.
யார் முதலில் பேசுவது? "நானா? அவனா?" என்ற போட்டி அவளுக்குள். "நான் ஏன் முதலில் பேச வேண்டும்? தவறு அவனிடம் தானே இருக்கிறது?" என்று சுமதியின் மனம் சொல்ல, "நான் வீட்டின் தலைவன், அவள்தான் வந்து பேச வேண்டும்" என சேகரின் பிடிவாதம் தடுத்தது.
புதன்கிழமை இரவு. நிலாவிற்குத் திடீரென காய்ச்சல் அடித்தது. ராகவன் பதறிப்போய் ரதியை டாக்டரிடம் கூட்டி சென்றான். திரும்பி வந்த ராகவனிடம் டாக்டர் என்ன சொன்னார்கள் என கேட்கவில்லை சுமதி. குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு அழுதாள். இருவரும் குழந்தையைப் பார்த்துக் கொண்டார்களே தவிர, ஒருவருக்கொருவர் பேசவில்லை.
மருந்தை ரதிக்கு கொடுக்கும்போது, "அம்மாவிடம் சொல், இந்த மருந்தை சாப்பிடுவதற்கு முன் சாப்பிட வேண்டும் . இந்த மருந்தை சாப்பிட்ட பின் சாப்பிட வேண்டும் என ,சரியா " என மகளிடமே சேகர் பேசினான். அப்பா சொன்னதை நிலா அப்படியே சொன்னபோது, சுமதிக்கு அழுகை அழுகையாய் வந்தது.
தன் குழந்தையின் முன்னால் தாங்கள் எவ்வளவு கோமாளிகளாகத் தெரிகிறோம்?' என்பது அவளுக்குப் புரிந்தது. ஆனாலும், "சாரி " என்ற அந்த ஒற்றை வார்த்தை நாக்கின் நுனி வரை வந்தும், ஈகோ அதைத் தொண்டையிலேயே தடுத்து நிறுத்தியது.
வியாழக்கிழமை மாலை, சேகர் அலுவலகத்திலிருந்து திரும்பியபோது, சுமதிக்கு பிடித்த மல்லிகைப்பூவை வாங்கி வந்திருந்தான். இதை எப்படி சுமதியிடம் கொடுப்பது. அதை அவள் வாங்க மறுத்து விட்டால் என்ன செய்வது என அவனின் ஈகோ தடுத்தது.
"காதலை விட கௌரவம் பெரிதாக தெரிகிறது. ஒரு வார காலமாக அந்த வீட்டில் இருவருக்கும் இடையே அப்படி ஒரு இறுக்கம். ராகவனுக்கு இதயம் கனத்தது. ஒரு சிறிய 'சரி போகலாம்' என்று கூறாத என் வார்த்தைக்காகவா இவ்வளவு பெரிய போர்? அன்று இரவு, சுமதி சமையலறையில் இருந்தபோது ராகவன் மெதுவாக பின்னால் வந்து நின்றான். மல்லிகை பூவுடன்.
"சுமதி... சாரிடா. அடுத்த வாரம் கண்டிப்பா உங்க அம்மா வீட்டுக்கு போகலாம், சாரி சுமதி"
அந்த ஒரு இரண்டெழுத்து மந்திர வார்த்தை! சுமதியின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்தது . "நீங்க ஏன் சாரி கேக்குறீங்க? நான்தான் பிடிவாதமா இருந்தேன். சாரிங்க..."
சாரி என்ற அந்த இரண்டெழுத்து மந்திரம் அவர்களிடையே நிலவிய ஈகோ என்ற இரண்டெழுத்து தடுப்பு சுவரினை தகர்த்தெறிந்தது.
அடுத்த நிமிடம் அந்த வீட்டின் மௌனம் உடைந்து. சிரிப்புச் சத்தம் கேட்டது. நிலா ஓடிவந்து இருவரையும் கட்டிக்கொண்டாள்.
இதிலிருந்து என்ன தெரியுது?
வாழ்க்கையில் சாரி என்ற இரண்டு எழுத்து வார்த்தை ,எப்படி மனிதரின் அன்பை நிலைநாட்டை செய்கிறது. ஒரு உறவில் மன்னிப்பு கேட்பவன் என்றும் தோற்றுப் போவதில்லை; மாறாக, அந்த உறவை அழியாமல் காப்பாற்றுகிறான்.
ஈகோ என்பது ஒரு இருட்டு அறை. அதில் நீங்கள் மட்டுமே இருப்பீர்கள். அதில் அன்பு என்ற விளக்கு ஏற்றி, சாரி ( மன்னிப்பு) என்ற ஒற்றைச் சொல்லால் வாழ்வை ஒளிரச் செய்யுங்கள்.
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)
கிடைத்தது பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் நீங்கியது.. அடுத்து என்ன நடக்கும்?
தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்
DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!
மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்
சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!
தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!
தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்
நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!
இரண்டெழுத்து மந்திரம்!
{{comments.comment}}