- ந. தீபலட்சுமி
“ஆர் யூ சேடிஸ்பைடு நவ்?”
அந்த ஒரு கேள்வி…
ஓ… மை காட்….
கேள்வியை விட, கேள்வி கேட்டவரும் அந்த மாடுலேஷனும்….
ஊரே ஊரடங்கில் இருந்த காலம்.
பாடசாலைகளும், வேத சாலைகளும் கதவுகளை கனமான கடினமான பூட்டுக்களால் காவல் காத்த காலம்.
பரவுது…பரவுது…. ஓடிடு…ஓடிடு… என ஓங்காரமாய் ஓலமிட்டு அழுத காலம்.
படித்தவனும் பாமரனும் பார்வையாலேயே பாகப்பிரிவினை செய்து கொண்ட காலம்.
பரபரவென்று இருந்த உலகை ஓய்வெடுக்கச் செய்த காலம்.
செவிகளில் எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருந்த வாகனங்களின் இரைச்சலை இறக்கச் செய்த காலம்.
வேலையில் இருந்தவரும் வேலை தேடியவரும் வேலையில்லாமல் கவலையோடு இருந்த காலம்.
கடவுளை நம்பியோரும் கடவுளை நிந்தித்தோரும் கடவுளை நினைத்து கண்மூடி கலங்கி நின்ற காலம்.
வாருங்கள்.. வாருங்கள்.. என உபசரித்த விருந்தினர்களை வர வேண்டாம்… வர வேண்டாம்.. என விரட்டி அடித்த காலம்.
உலகமே நிசப்தமாய்…
எங்கெங்கு காணினும் கொரோனா செய்திகளாய் .
இருட்டில் வழி தெரியாமல் இருந்தவனுக்கு ஒரு சிறு வெளிச்சப் புள்ளியாய் வந்தது தடுப்பூசி.
எத்தனை எத்தனை இழப்புக்கள் ?
பக்கத்து வீட்டினரும் பகையாளியாய் மாறியதை எவ்வாறு மறப்பது?
மறக்க முடியுமா?
அக்காலம் விட்டுச்சென்ற ஆறாத வடுக்கள் ஏராளம்.
இதில் குழந்தைகளின் கல்வி விதிவிலக்கா என்ன?
கெட்டதிலும் ஒரு நன்மை உண்டு என சொல்வார்களே அது போல் அமைந்தது ஆன்லைன் கல்வி முறை.
நம் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதியது.
ஜூம் மீட்டிங் கூகுள் மீட்டிங் என புதிய புதிய விஷயங்கள்.
மாணவர்களுக்கு மட்டுமா?
ஆசிரியர்களுக்கும் தான்.

கற்றல் என்பதே தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பது தானே?
செல்போனின் ஆதிக்கம் தலைதூக்க ஆரம்பித்த காலம்.
எங்கள் பள்ளியில் முதன் முதலில் என்னால் அறிமுகப்படுத்திய கற்றல் கற்பித்தல் நிகழ்வு.
தினமும் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை. பெற்றோரின் செல்போன் அந்த நேரத்தில்தான் மாணவர்களுக்கு கிடைக்கும்.
வெகு சிலரே வகுப்பில் கலந்து கொள்வர்.
பரவாயில்லை…
சம்திங் இஸ் பெட்டர் தேன் நத்திங்.
எனவே கற்றல் கற்பித்தல் நிகழ்ச்சியை நான் கைவிடவில்லை. என்னுடைய மாணவச் செல்வங்களும் என்னை ஏமாற்றவில்லை.
கற்றல் இடைவெளியை குறைக்க “கல்வி டிவி”
கற்பித்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை கண்டறிய “ஹோம் விசிட்”
வித் மாஸ்க்
வித்தவுட் டச்சிங்
பட்
டெய்லி கோச்சிங்.
லாக் டவுன் முடிந்து பள்ளி திறப்பு.
வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாடங்கள் போதிப்பு.
“கொரோனா ஆல் பாஸ்”
என்னவென்றே தெரியாமல் அதனை கொண்டாடிய மாணவர்கள்.
அதில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்க போராட வேண்டிய காலமும் வந்தது.
பொதுத்தேர்வு எழுதும் 10,11 மற்றும் 12 மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம்.
அப்பாடா..!
என பெருமூச்சு விட்ட ஆசிரியர்களும் மாணவர்களும்.
ஆங்கிலத்தின் நிலைமை கேட்க வேண்டுமா? தாய் மொழியிலேயே தடுமாறும் நம் குழந்தைகளுக்கு ஆங்கிலம் எட்டாக்கனி ஆயிற்றே.
ஆனாலும் அதனை எட்டிப் பறிக்கச் செய்வது தானே ஒரு ஆசிரியரின் வேலை?
அதனை நான் செவ்வனே செய்தேன்.
மதுமிதா …..
மிகச்சிறந்த மாணவி. வகுப்பில் கப்சிப். அமைதியான தோற்றம். ஆழமான சிந்தனை. அழகிய கையெழுத்து.
“எள் என்றால் எண்ணெயாய் நிற்பாள்”
தொடர் முயற்சி ,பயிற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கான ஓர் மிகச் சிறந்த உதாரணம்.
எனக்கு எப்பொழுதும் ஒரு மனக்குறை உண்டு. எவ்வளவு ஆழமாக கற்பித்தாலும் 100% என்பதையும் நூறு மதிப்பெண் பெறும் மாணவர்களையும் உருவாக்க முடியவில்லையே என சிலாகிப்பது உண்டு.
இதனை நான் அவ்வப்பொழுது வகுப்பறையில் கூறி வருத்தப்படுவதும் உண்டு. அதனை ஆமோதிப்பது போல் மாணவர்களும் தலை கவிழ்ந்து ஏற்றுக் கொள்வதும் உண்டு.
ஒவ்வொரு வருடமும் பொதுத் தேர்வு முடிவுகள் என்னை நானே செதுக்கிக் கொள்ள ஒரு பாடமாக அமையும். அந்த வருடமும் அப்படித்தான்.
2021-2022
இதோ பத்தாம் வகுப்பு ரிசல்ட்.
பரபரவென என்னுடைய வகுப்பிற்கான தேர்வு முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.
வழக்கம்போல் தமிழ் வழி மாணவர்கள் ஒரு சிலர் தேர்வில் தோல்வி அடைந்திருந்தனர்.
என்னை நானே நொந்து கொண்ட நேரத்தில் பளிச்செனப்பட்டது 99 மதிப்பெண்கள்.
ஆம்.. மதுமிதா ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள்.
பல மாணவ மாணவிகள் என்னுடைய பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றனர். ஆனால் முதன் முதலில் 99 மதிப்பெண்கள்.
அவ்வளவு சந்தோஷம் எனக்கு
சரியாக அந்த நேரத்தில் என்னுடைய செல்போன் ஒலித்தது.
ஸ்கிரீனில்…
ஸ்டுடென்ட் மதுமிதா…என மிளிர்ந்தது.
“ஹலோ..?”
“ஆர் யூ சாட்டிஸ்பைடு நவ்,மிஸ்?”
சட்டென என் கண்களில் கண்ணீர் துளிகள். எதிர்பாராத கேள்வி.
எனக்காகவே படித்தாளா?
“ஒன் வேர்ட் மட்டும் ஒரே ஒரு தப்பாயிடுச்சு மிஸ். இல்லைனா 100 மார்க் வந்திருக்கும், சாரி மிஸ்”
அவள் என்னிடம் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இப்பொழுதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இன்னும் எத்தனையோ மதுமிதாக்கள் இப்பொழுதும் என்னிடம் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால் அந்த சின்சியாரிட்டி? கியூரியாசிட்டி? …….
வரும் காலங்களிலும் இதுபோன்று அதிக மாணவர்கள் என்னைக் கேள்வி கேட்க வேண்டும் என ஆவலாக காத்துக் கொண்டிருக்கும்…….. நான்.
(ந.தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியர்( ஆங்கிலம்), அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்)
சட்டசபைத் தேர்தல் 2026.. திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியீடு: கனிமொழி எம்.பி தகவல்
Layoff: சசிதரூர் மகனை வேலையில் இருந்து நீக்கிய வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம்!
தை மாத சங்கடஹர சதுர்த்தி.. விநாயகரை வணங்கி இன்னல்கள் நீங்கி.. நலம் பெறுக!
வாழ்க்கை நமக்கு சந்தோஷத்தை கொடுப்பதற்காக அல்ல (Life is not here to make us Happy)
மோதல் போல காட்சி படுத்தி மாயம் செய்கிறாய்.. காதல் !
நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை... எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கிறார்
தேமுதிக சார்பில்.. விஜயகாந்த் போட்டியிட்டு வென்ற தொகுதியில் போட்டியிடப் போவது யாரு?
அது ஒரு கொரோனா காலம்.. மறக்க முடியாத ஒரு மலரும் நினைவு!
மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. மதுரை கூட்டத்தில் பங்கேற்பதாக தகவல்
{{comments.comment}}