ஞானச்செறுக்கு நிறைந்த.. பாட்டுப் புலவன்.. முண்டாசுக் கவிஞன் .. பாரதியாரின் நினைவு நாள் இன்று!

Sep 11, 2025,01:12 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மகாகவி பாரதியார் நினைவு நாள் இன்று..  செப்டம்பர் 11ஆம் தேதி வியாழக்கிழமை யான இன்று இந்திய எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் மகாகவி பாரதியார் அவர்களின் நினைவு தினம். இந்த நாளில் மகாகவியின் சிறப்புகளை பற்றி காண்போம்...


பாரதியார் பற்றிய தகவல்:


பிறப்பு :டிசம்பர் 11 ஆம் தேதி 1882.

இறப்பு: செப்டம்பர் 11 ஆம் தேதி 1921 ஆம் ஆண்டு இறந்தார்.

இயற்பெயர் :பாரதியின் இயற்பெயர் சின்னச்சாமி சுப்பிரமணியன் ஆகும்.

சிறப்பு பெயர்கள் :பாரதி, பாரதியார்,மகாகவி.

பிறந்த ஊர்: அவர் திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார்.

பிரபலமான பட்டப் பெயர்கள் :மீசைக் கவிஞன், முண்டாசு கவிஞன்.




பாரதியின் சிறப்புகள்: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று பாரதியார் தனது கவிதைகள் மூலம், எழுத்துக்கள் மூலமும் மக்களிடையே விடுதலை உணர்வையும், தேசபக்தியையும் தூண்டினார். இவர் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். பெண்ணடிமை,சாதி வேறுபாடு போன்ற சமூகத் தீமைகளை எதிர்த்துப் போராடி பெண்களின் விடுதலைக்காகவும், சாதி மறுப்பிற்காகவும் குரல் கொடுத்தவர்.


பாரதியார் நவீன தமிழ் கவிதை முன்னோடியும் ஆவார்.இவர் புதுமையான கவிதை நடை மொழி மற்றும் வடிவங்கள் மூலம் நவீன தமிழ் கவிதை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார். பாரதியார் பல மொழிப் புலவர் : தமிழோடு வடமொழி,இந்தி,ஆங்கிலம் பிரெஞ்சு போன்ற பல மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார்.


பாரதியார் கவிஞர் மட்டுமல்லாமல் பன்முக எழுத்தாளரும் ஆவார்.இவர் பத்திரிக்கையாசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. பல இதழ்களையும், பத்திரிகைகளையும் வெளியிட்டு தமிழ் மற்றும் இந்திய கருத்துக்களை நாடு முழுவதும் பரப்பினார்.  பாரதியார் தமிழ்,தமிழர் நலன் மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்த தனது கருத்துக்களை அவருடைய எழுத்துக்கள் மூலம் மக்கள் மனதில் விதைத்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


இவருக்கு பல புனைப்பெயர்கள் உண்டு. தேசிய கவி,மகாகவி, தேசாபிமானி போன்ற பல சிறப்பு பெயர்களும் இவருக்கு உண்டு. இவரது கவிதை திறனுக்காக "பாரதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதன் பொருள் 'புலமை மிக்கவர் 'என்பது ஆகும். 


பாரதியாரின் கவிதை நூல்கள் : புதிய ஆத்திச்சூடி, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், சின்னஞ்சிறு கிளியே, விநாயகர் நான்மணிமாலை, பதஞ்சலி யோக சூத்திரம், பகவத் கீதையின் தமிழ் மொழி பெயர்ப்புகள், பாப்பா பாட்டு என பல. 


பாரதியாரின் புனைப்பெயர்கள்: காளிதாசன்,சக்தி தாசன், சாவித்திரி, நித்திய தீரர் என்பதாகும்.


இந்திய சுதந்திர ஆர்வலர், சமூக சீர்திருத்தவாதி, பத்திரிக்கையாளர், ஆசிரியர்,கவிஞர், பன்மொழிப் புலவராக விளங்கிய இவர் "பாரதி" என்றும் "பாரதியார்" என்றும் பட்டப் பெயராலும் "மகாகவி பாரதி "  (சிறந்த கவிஞர் பாரதி) என்ற மற்றொரு பட்டத்தினாலும் பிரபலமாக அறியப்படுகிறார்.


இறப்பு:  சிறைவாசத்தால் பாரதி மோசமாக பாதிக்கப்பட்டார். உடல் நலக்குறைவினால் மிகவும் அவதிப்பட்டார்.1920 ஆம் ஆண்டில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.இது இறுதியாக அவரது நடமாட்டத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது. ஈரோட்டில் கருங்கல்பாளையம் நூலகத்தில் "மனிதன் அழியாதவன் "என்ற தலைப்பில் தனது கடைசி உரையை நிகழ்த்தினார்.


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் லாவண்யா என்ற இந்திய யானையால் அவர் தாக்கப்பட்டார். அவர் அந்த யானைக்கு அடிக்கடி உணவளித்து வந்தார். ஒருநாள் யானைக்கு தேங்காய் ஊட்டியபோது யானை அவரை தாக்கியது. அந்த சம்பவத்தில் அவர் உயிர் பிழைத்த போதிலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து சில மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 11ஆம் தேதி 1921 ஆம் ஆண்டு அதிகாலையில் இறந்தார். 


பாரதி ஒரு சிறந்த கவிஞராகவும், தேசியவாதியாகவும் கருதப்பட்டாலும்  அவருடைய இறுதிச்சடங்கில் 14 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  மகாகவி பாரதியார் மறைந்தாலும் அவருடைய எழுத்துக்கள்,கவிதைகள் நம் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்று விளங்குகின்றன.


தென் தமிழ் வாசகர்கள் அனைவரும் இங்கு பெருமைப்படக் கூடிய விஷயம் ஒன்று உண்டு. நமது தென் தமிழ் இணையதளத்தின் சின்னமும் முண்டாசுக் கவிஞன் மகாகவி பாரதியார்தான்..  அவருக்கு நாங்கள் என்றென்றும் தலை வணங்குகிறோம். அவருடைய நினைவு நாளான இன்று அவருடைய  சிறப்புகளையும் பெருமைகளையும்  பற்றி தொடர்ந்து காண்போம்.. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழை தொடரும்... நாளை 3 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது: வானிலை மையம் தகவல்!

news

அம்மாவின் அன்பு!

news

கடன் -தலைக்குனிவு

news

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை.. அரசாங்கம் இருக்கிறதா?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

news

சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை: அன்புமணி ராமதாஸ்!

news

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.880 உயர்வு!

news

ரஜினி, சூர்யா, தனுஷ் படங்களுக்கு புது செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. ஒத்து வருமா?

news

துள்ளுவதோ இளமை புகழ் நடிகர் அபிநய் காலமானார்.. கல்லீரல் நோயால் மறைந்த சோகம்!

news

அதிமுக கூட்டணி.. வருவதற்கு யோசிக்கும் தவெக விஜய்.. எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்