வடபழனி முருகன் கோவில் வைகாசி விசாகம் பிரம்மோற்சவ விழா

May 25, 2026,03:15 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


முருகப்பெருமானின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களில்  சென்னை வடபழனியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வடபழனி ஆண்டவர் கோவில் ஒன்றாகும். கோவில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாசாமி  நாயக்கர்  என்பவரால் உருவாக்கப்பட்டது. 1890களில் முருக பக்தர் அண்ணாசாமி நாயக்கர் ஓலை கொட்டகையாக தொடங்கப்பட்டது இக்கோவில். 


அண்ணாசாமி நாயக்கரின் மறைவுக்கு பிறகு  அவரது சீடர் ரத்னசாமி நாயக்கர்  இக்கோவிலை  விரிவு படுத்தினார். பின்னர் 1920 களில் ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டது. 1970களில் பிரம்மாண்ட கோபுரங்கள் மற்றும் சிற்பங்கள் உருவாக்கப்பட்டு புகழ்பெற்ற ஆன்மீகத் தலமாக  விளங்குகிறது.


மூலவர்:




இக்கோவிலில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற  கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருமண பிரார்த்தனைகளுக்கும், குடும்ப ஐஸ்வர்யத்திற்கும் இத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது. வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி போன்ற விழாக்கள் மிகவும் சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகின்றன.


மூலவரான தண்டாயுதபாணி, விநாயகர்,சொக்கநாதர், மீனாட்சி சண்முகம்,வள்ளி தெய்வானை மற்றும் பைரவர் ஆகியோரின் சன்னதிகளும் இக்கோவிலில் அமைந்துள்ளன.


பெயர்க்காரணம்:


பழனிக்கு செல்ல இயலாத பக்தர்கள் மற்றும் அவர்களுடைய வசதிக்கு ஏற்ப அதே போன்ற தெய்வீக ஆற்றலுடன் இந்த தலம் அமைக்கப்பட்டதால் "வடபழனி "என்று அழைக்கப்படுகிறது.


வைகாசி விசாகம் மே 30ஆம் தேதி மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. பத்து நாட்கள் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக  நடைபெறுகிறது.

 

நிகழ்ச்சி நிரல் :


21.05.2026 அன்று பத்து நாட்கள் பிரமோற்சவ விழா துவஜா ரோஹனம்  எனும் கொடியேற்ற வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.


மே 29ஆம் தேதி வரை தினமும் காலை 7:00 மணிக்கு மங்களகிரி விமான புறப்பாடு நடக்கிறது.


24.05.2026 -


ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா.


25.05.2026- இரவு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு.


26.05.2026 - இரவு யானை வாகன புறப்பாடு.


27.05.2026 - காலை தேர்த்திருவிழா.


28.05.2026 - இரவு குதிரை வாகன புறப்பாடு.


29.05.2026 - இரவு 7:00 மணிக்கு வடபழனி முருகன் உலா வருதல்.


30.05.2026 - இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம். மயில்வாகனத்தில் புறப்பாடு இதனைத் தொடர்ந்து கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


 மேலும் இது போன்ற  சுவாரஸ்யமான  தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்