உங்க அன்பானவர்களை.. இம்ப்ரஸ் பண்ண பொசு பொசு "டெடி".. வாங்கிட்டீங்களா..!

Feb 10, 2024,10:16 AM IST

சென்னை: பெண்களுக்கு பிடித்த பொசு பொசு "டெடி"களை பரிசாக கொடுத்து இம்ப்ரஸ் செய்யும் அழகான தருணம் இன்று!


ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தை காதல் மாதம் என்று சொல்லலாம். இல்லை...இல்லை.. காதலருக்கான மாதம் என்று சொல்வது தான் சரி. அந்த வரிசையில் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி ரோஸ் டேவில் தொடங்கி நான்காவது நாளான பிப்ரவரி 10ஆம் தேதி டெடி டேவில் அன்பானவர்களுக்கு பரிசு வழங்குவதற்கான தினம் இன்று!




காதலர் வாரத்தில் இன்றைய தினம் டெடி டே.. உங்க அன்பானவர்களிடம் ப்ரொபோஸ் பண்ணிட்டீங்க.. அவங்களுக்கு புடிச்ச சாக்லேட் கொடுத்துட்டீங்க.. அப்புறம் என்ன அவர்களுக்கு பிடிச்ச கிப்ட் கொடுத்து அவர்களை இம்ப்ரஸ் செய்யுங்க. அதுக்கான நாள்தாங்க இன்று.


என்னோட காதலி நல்லா பேசுற.. நல்லா பழகுறா.. என்னோட காதலையும் அக்சப்ட் பண்ணிட்டா.. நான் கொடுத்த சாக்லேட்டையும் வாங்கிட்டா.. ஆனா அவளை எப்படி இம்ப்ரஸ் பண்றதுதான்  தெரியல .. அப்படின்னு எல்லா காதலர்களும் யோசிக்கிறது வழக்கம்தான். டோன்ட் ஒர்ரி  பி ஹாப்பி. அதற்கு ஒரு சிம்பிளான ஐடியா சொல்கிறேன்.


பொம்மைகளை பிடிக்காத மனிதர்கள் எவரும் இருக்க முடியாது. அதிலும் டெடி பொம்மைகளை (கரடி பொம்மை) பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.. குறிப்பாக பெண்கள். வண்ணமயமான டெடி பொம்மைகள் அனைவரையும் வசீகரிக்க கூடிய இயல்பை பெற்றது. அதன் அழகை ரசிக்காமல் இருக்கவும் முடியாது. அதன் மென்மையான மேனியை தொட்டுப் பார்க்கவும். தூக்கிப் பார்க்கவும். அதை கட்டிப் பிடித்து பார்க்கவும் ஆசைப்படுவோம்.


குறிப்பாக பெண் குழந்தைகள் முதல் பருவப் பெண்கள் வரை அனைவரும் டெடி பொம்மை மீது அதீத காதல் கொண்டவர்கள்தான். பெண்களுக்கு இயல்பாகவே பொம்மைகளை ரொம்ப பிடிக்கும். அதுவும் மென்மையாக இருக்கக்கூடிய டெடி பொம்மைகளை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்தத  மென்மையான டெடி பொம்மைகள் அன்பையும், அரவணைப்பையும் கொடுக்கிற மாதிரி ஃபீல் பண்ணுவாங்க. அன்பானவர்கள் அருகில் இல்லாத போது, டெடி பொம்மைகள்தான் அவர்களுக்குத் துணையாக இருக்கும்.




டெடி பொம்மைகளின் வசீகரிக்க கூடிய அழகு பெண்களுக்கு பிடிக்கும். டெடி பியரை தன்னுடைய தோழியாக, தோழனாக, காதலனாக, நண்பனாக எண்ணிவார்கள். மனம் அமைதியிழக்கும்போதெல்லாம்  பஞ்சு போன்ற மேனி கொண்ட டெடி பொம்மையைக் கட்டிப்பிடித்து படுத்துக் கொள்ளும்போது கிடைக்கும் மன நிம்மதியும், சுகமும் தனி.


இப்ப தெரிஞ்சுட்டீங்களா.. என்ன கொடுக்கலாம்  என்று!  உங்க காதலிக்கு ஒரு டெடியை வாங்கி கிஃப்ட்டா கொடுங்க. அதுலேயும் அவங்களுக்கு பிடித்த மாதிரியான டெடியை கிப்ட்டா குடுங்க. அப்படி  டெடியை கொடுப்பதால் அன்பை வெளிப்படுத்துவதாக எண்ணி ஈஸியா இம்ப்ரஸ் ஆயிடுவாங்க. காதலர்கள் அன்பின் அடையாளமாக கொடுக்கக்கூடிய அந்த கிஃப்டில் உணர்ச்சிகரமாக பீல் பண்ணுவாங்க. அதுமட்டுமல்ல  காதலிக்கு புடிச்ச மாதிரி கிஃப்ட் கொடுத்தோம் என்றால் அவங்க காதலுக்கான அடையாளமாக.. பொக்கிஷமா.. நினைச்சு அதை காதலின் நினைவூட்டல் கிஃப்டாக பத்திரமாகவும் வைத்துக்கொள்வார்கள்


உங்க அன்பானவர்களுக்கு  எந்த வகை டெடி பிடிக்கும்.. என்ன கலர் பிடிக்கும்.. என்று தெரிந்து டெடி டே வை கொண்டாடுங்க. அழகான டெடியை வாங்குங்க.. அன்பே நீ டெடியை விட ரொம்ப க்யூட்டா இருக்கே என்று உங்களவரிடம் சொல்லுங்கள்.. உருகிப் போய் விடுவார்.. டபுள் ஹேப்பி டேயாக மாறிடும்.. பிறகென்ன என்ஜாய்!


காதலர்கள் அனைவருக்கும் ஹாப்பி டெடி டே!

சமீபத்திய செய்திகள்

news

ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி

news

காலையில் தினமும் சாப்பிட சூப்பர் ரெசிப்பி.. குயினோவா.. அதாங்க சீமை திணைப் பொங்கல்!

news

உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு

news

சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்

news

வாடிக்கையாளர்களை ஏமாற்றிய தங்கம் விலை... 4வது நாளாக இன்றும் உயர்வு!

news

ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?

news

தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?

news

ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையில் தோல்வியுற்ற பாதுகாப்பு ஒத்திகை.. குண்டை கண்டுபிடிக்காத போலீஸார் சஸ்பெண்ட்

அதிகம் பார்க்கும் செய்திகள்