சென்னை: அன்பே ஆருயிரே காதலில் அடி எடுத்து வைக்கும் உன்னை நான் வரவேற்கிறேன். அந்த இனிய நாளான இன்று ரோஸ் டேவில் எனது அன்பை பரிமாறுகிறேன்... என்னங்க பயந்துட்டீங்களா.. அட இன்னில இருந்து காதலர் தினம் தொடங்குங்க.. இன்னிக்கு என்ன நாள்.. ரோஜா தினம்.. சூப்பரான ரோஜாவுடன், சுப்ரீமாக காதலர் வாரத்தைத் தொடங்கலாம் வாங்க.
காதல தின ஒரு வார கொண்டாட்டத்தில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 7ம் தேதி ரோஸ்டே கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான காதலர் தின கொண்டாட்டத்தில் முதல் நாளான இன்று ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. காதலில் அழகான, தூய்மையான அன்பை வெளிப்படுத்தும் தொடக்க நாளாகவும் கருதப்படுகிறது.
ஆயிரம் வண்ணங்களில் ரோஜா பூக்கள் இருந்தாலும் காதலர் தினத்தில் முக்கியமாக கருதப்படும் சிவப்பு நிற ரோஜாவுக்கென்று தனி மகத்துவம் உண்டு. ஒவ்வொரு வண்ணமும் அதன் குணத்தையும் மனத்தையும் பறைசாற்றும். அந்த வகையில் சிவப்பு நிற ரோஜா அன்பையும் மகிழ்ச்சியையும்.. மஞ்சள் நிற ரோஜா நட்பையும்.. வெள்ளை நிற ரோஜா தூய்மையையும் ஒற்றுமையையும்.. பிரதிபலிக்கின்றன.

அதனால்தான் காதல் சின்னமாக ரோஜா பூக்கள் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது ரோஜாவுக்கும் காதலுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. அது என்னவென்றால் ரோஜாப்பூவை நம் பார்த்ததும் நம் கண்களுக்கும் மனதிற்கும் இனம் புரியாத ஏதோ சந்தோஷமும் பரவசமும் வெளிப்படும். அதாவது அழகான மென்மையான இதழ்களை கொண்ட சிவப்பு ரோஜாவை, எப்படி முட்கள் கொண்ட காம்பில் இருந்து பக்குவமாக பிரித்து எடுக்கிறோமோ.. அதேபோல எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை உடைத்து எறிந்து அன்பின் அடையாள தினமாக இருக்கும் இன்று உன்னை ஏற்கிறேன். ரோஜா பூவின் இதழ்கள் எவ்வளவு மென்மையானதோ.. அதேபோன்று மென்மையான காதலியின் கரம் பற்றி நம் அன்பு மட்டுமே என்றும் நிலைத்து நிற்கும் என்பதை வெளிப்படுத்தும் அழகான தருணம் இன்று.
நண்பர்களாக இருந்து காதலர்களாக அடி எடுத்து வைக்கும் ரோஸ் டே அன்று காதலன் காதலியிடம் ஒற்றை சிவப்பு ரோஜாவை கொடுப்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..? நாம் இருவரும் சமம். நம் வாழ்நாள் மாறும் வழியில் தைரியமாக அன்பை பரிமாற அடியெடுத்து வைக்கும் தருணம் இது. வாழ்நாளில் இறுதிவரை நீடிக்கும் அழகான தருணம் இன்று பெண்ணே.. என்று காதலன் காதலியிடம் சிவப்பு ரோஜாவை நீட்டி அன்பை ஏற்பார். இருமனம் இணையும் திருமணத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்பதைப் போல அதற்கு முன்பு வரும் காதலிலும் முன்பு வரை எப்படியோ இனிமேல் நாம் இருவரும் அன்பை பரிமாறிக் கொண்டு ஒன்றாக இணைந்து வாழ்வோம் என்பதை பறைசாற்றவே ரோஸ் டேவில் ரோஜாக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்..!
ஆகவே இந்த ரோஸ் டேவில் அழகாக, மிக ஆழமான உணர்வான அன்பை வெளிப்படுத்தி காதலர் வார கொண்டாட்டத்தில் அடி எடுத்தும் வைக்கும் காதலர்களுக்கும் நண்பர்களுக்கும் ரோஸ் டே வாழ்த்துக்கள்..!
ஏற்கனவே காதலித்து திருமணமான ஜோடிகளும் கூட இன்று ரோஜாக்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.. தப்பில்லை!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}