- முனைவர் கோ.லதா
நாவெனும் கூர்வாள் நல்லதோ கேடோ
நவிலும் சொல்லினால் நன்மையோ தீமையோ
வீண்சொல் விளையாடி வாயினில் வார்த்தால்
விளைவது துன்பமே விதிபோல் வந்திடும்
சொல்லுக்கு அடக்கம் சூடிடு மனமே
சோதித்து பேசிடு சுடுசொல் வேண்டாம்
பிறர்மனம் புண்பட பேசிடல் பாவம்
பெரியோர் கூற்றிது பேணிடு நன்றே
கோள்சொல்லி குற்றமும் கூறிடல் தீது
கொதித்தெழும் சினத்தால் குலைந்திடும் வாழ்வு
இன்சொல் பேசிடு இதயம் குளிரும்
ஈகையாய் சொல்லிடில் ஏற்றம் தந்திடும்
வாய்சொல் வராமல் வஞ்சமாய் காப்பாய்
வழுவின்றி வாழ்ந்திட வாய்ப்பிது ஒன்றே
நல்லதை நினைத்திடு நாவினில் நவிலு
நன்மை செய்யும் நாளும் நாளும்

பொய்சொல் புகலிடம் பொல்லாங்கு தரும்
புன்சொல் கேட்டிடில் புண்ணாகும் நெஞ்சம்
உண்மை உரைத்திடு உள்ளம் உயரும்
உலகம் போற்றிடும் உத்தமன் என்றே
வீண்சொல் தவித்திடு வாழ்வு வளரும்
வான்புகழ் சேர்ந்திடும் வையகம் முழுதும்
நாவினை காத்திடு நல்லறம் வளர்க்க
நாளையும் வாழ்ந்திடு நன்மையின் நிழலில்
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}