வெண் பூசணி நெல்லிக்காய் ஜூஸ்.. சூப்பர் டேஸ்ட்டி.. சம்மர் கொடுமையிலிருந்து ஜாலியா தப்பலாம்!

Apr 02, 2025,01:33 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: வெயில் காலம் வந்தாலே வெளியில் தலை காட்ட முடியாது . அந்த அளவுக்கு வெயில் கொடுமை அதிகமாக இருக்கும். இதோ மீண்டும் ஒரு வெயில் காலம் தொடங்கிவிட்டது. இந்த வெயில் நேரத்தில் உடம்புக்கும் வெயில் கொடுமையில் இருந்து தப்புவதற்கும் உகந்த ஒரு அருமையான டிப்ஸ் ஒன்றை உங்களுக்கு தருகிறோம் . அதுதான் வெண்பூசணி அம்லா ஜூஸ்.


அம்லா என்றால் நெல்லிக்காய்.. அதையும் வெண்பூசணியையும் சேர்த்து ஜூஸ் போட்டுச் சாப்பிட்டுப் பாருங்க.. செமயா இருக்கும்.


தேவையான பொருட்கள்


வெண்பூசணி ஒரு கப் கட் செய்தது

பெரிய நெல்லிக்காய் ஒன்று

சீரகம் அரை ஸ்பூன்

இந்து உப்பு தேவைக்கு ஏற்ப

புதினா இலைகள் ஆறு


செய்முறை




1. வெண்பூசணி தோல் நீக்கி விதைகள் நீக்கி பொடிப்பொடியாக கட் செய்து கொள்ளவும்2.  பெரிய நெல்லிக்காய் பொடி பொடியாக கட் செய்து கொள்ளவும்

3. ஒரு மிக்ஸி ஜாரில் கட் செய்த வெண்பூசணி பெரிய நெல்லிக்காய் சீரகம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

4. சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி அழைக்கவும். பிறகு நன்றாக வடிகட்டவும் அதனுடன் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்

5 அல்லது 6 புதினா இலைகள் சேர்த்து சிறிது சிறிதாக பருக இந்த கோடை வெயிலுக்கு இதமாக ,அருமையான வெண்பூசணி ஜூஸ்.


இதில் உள்ள பயன்களை பார்த்தால் அசந்து விடுவீர்கள்

1. மகா பிராணா என்ற பெயரும் இந்த வெண்பூசணிக்கு உண்டு . மேலும் Ash gourd என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.2.  இந்த வெண்பூசணி தினமும் உட்கொண்டால் நீரிழிவு மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளிட்ட பல கடுமையான உடல் நலப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

3. மன அழுத்தத்தை போக்கும் வலிமை இதற்கு உண்டு

4. வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன.5.    உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஜூஸை தினமும் அருந்தலாம்

6 .செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது

7. ரத்தத்திற்கு நல்லது பெண்களின் வெள்ளைப் போக்கு நீங்கும்

8. இதில்     எல் - டி ரி ப் டோபான்   உள்ளது. இது உடலால் உற்பத்தி செய்ய முடியாத அத்தியாவசிய அமினோ அமிலம்.

9. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எலக்ட்ரோலைட்க்கு சமமானது

10.புரதம் ,இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.


விலை மலிவானது தான் இந்த வெண்பூசணி. ஆனால்,இத்தனை நன்மைகளை கொடுக்கும் இந்த சாம்பல் பூசணியை பயன்படுத்தி கோடை வெயிலுக்கு இதமான ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.

மேலும் இது போன்ற சுவையான ரெசிபிகளுக்கு  இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?

news

வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!

news

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!

news

மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!

news

நீதி தவறிய செயலுக்காக முதல்வர் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

ரஷ்யாவில் கடும் நிலநடுக்கம்.. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலை தாக்குதல்!

news

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

Honeymoon in Shillong: மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் சினிமா ஆகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்