உயிர் காக்கும் உத்தமர்களே!

Jun 30, 2026,05:05 PM IST
- அ.வென்சி ராஜ்

உங்களுக்கு எப்படி செல்வது எங்கள்   நன்றியை...
 
ஆம்புலன்ஸின் சத்தம் எங்களின் அடிவயிற்றில் புளியை கரைத்தாலும்...
நீங்கள் செய்கின்ற வேலைகளை அப்படியே போட்டுவிட்டு...
ஓடிவந்து அல்லவா உயிரை காக்கின்றீர்...

உங்கள் உன்னதமான பணிக்கு...
உங்களுக்கு எப்படி சொல்லுவோம் எங்கள் நன்றியை..?

ஜாதி மதம் பார்ப்பதில்லை நீங்கள்...
அறிவியலின் அத்தனை முன்னேற்றத்தையும் ஆக்கப்பூர்வத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் அதிநவீன விஞ்ஞானிகள் நீங்கள் 



உங்கள் ஒப்பற்ற பணிக்கு...
உங்களுக்கு எப்படி சொல்லுவோம் எங்கள் நன்றியை....

சம்பாதிப்பது மட்டும் நோக்கம் அல்ல உங்களுக்கு....
சாமானியனும் சராசரி வயது எட்ட சரமாரியாய் உழைக்கிறீர்கள்...

உங்கள் மேன்மைமிகு பணிக்கு..
உங்களுக்கு எப்படி சொல்லுவோம் எங்கள் நன்றியை...

மருத்துவ உலகில் மாஃபியாக்கள் மிருகங்களாய் எங்கோ பயணிக்க...
எங்களோடு இருந்து உயிர் கொடுத்து உழைக்கும்  தன்னலமில்லா மனிதர்களே...

உங்கள்  சுயநலமில்லா பணிக்கு...
உங்களுக்கு எப்படி சொல்வோம் எங்கள் நன்றியை..

மணிக்கணக்காய் அறுவை சிகிச்சையில் மனமுவந்து நிற்கின்றீர்கள்...
மரத்துப்போன உங்கள் கால்களை பற்றி மனதளவில் சிறு கவலை கூட கொள்ளாமல்...

உங்கள் புனிதமான பணிக்கு...
உங்களுக்கு எப்படி செல்வோம் எங்கள் நன்றியை..

கடவுளாகவும் அன்னையாகவும் அரவணைத்து உழைக்கிறீர்கள்...
உயிருக்கு உயிர் கொடுத்து உலகிற்கு அளிக்கிறீர்கள்...

உத்தமர்களே!
உங்கள்  உருவில் கடவுளைக் காண்கின்றோம் ...
நன்றிகள் ஆயிரம்...

நீங்கள் செழிக்க...
உங்கள் குடும்பம் தழைக்க...
வெற்றிகள் குவிய....
உங்கள் ஆரோக்கியம் பெருக..
இருகரம் கூப்பி ஆண்டவரை வேண்டுகிறோம்...

மனம் நிறைந்த இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள் (இந்தியாவில் நாளை தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படவுள்ளது)

(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு

news

மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?

news

பாட்டியானாலும் பிரச்சினை!

news

"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!

news

புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!

news

நான் கம்ப்யூட்டர் கற்ற கதை

news

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.. அப்படீன்னா அர்த்தம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்