சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் இப்படம் தொடங்கியுள்ளது.
தனது இயல்பான நடிப்பில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. இவருக்கென்று ரசிகர் பட்டாளம் தனியாக உள்ளது. இவரின் நடிப்பில் வெளியான பீட்சா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சேதுபதி, 96 , காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் கலக்கியவர். தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னகத்தே கொண்டவர்.
இப்போது ட்ரெயின் படம் மூலமாக விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்துள்ளார். இந்த படத்தின் கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார். நாயகியாக டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .
ட்ரெயின் திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு இந்த ட்ரெயின் படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள் . இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கு இசையும் அமைக்கிறார்.
ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. பூஜையின் போது விஜய் சேதுபதி நன்றாக ஸ்லிம்மாகி, வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் பார்க்கவே படு ஸ்மார்ட்டா காணப்பட்டார்.
பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் முரளி ராமசாமி, ராதாகிருஷ்ணன், எஸ் கதிரேசன், தயாரிப்பாளர் அன்புச்செழியன், கல்யாணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
{{comments.comment}}