சூடு பிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. ஜூலை 6 முதல் 3 நாட்கள்.. உதயநிதி பிரச்சாரம்!

Jul 02, 2024,07:59 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு ஜூலை 6,7,8 ஆகிய 3 நாட்கள் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.


2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் திமுக உறுப்பினராக இருந்தவர் ராதாமணி. இவர் அப்பதவியில் இருக்கும் போதே உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டு தோல்வியுற்றார். அதே விக்கிரபாண்டி தொகுதியில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் புகழேந்தியே மீண்டும் போட்டியிட்டார். 




இம்முறை வெற்றி பெற்றார். விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார் புகழேந்தி.சமீபத்தில் புகழேந்தி உடல்நிலை குறைவு காரணமாக காலமானார்.  இதையடுத்து அந்தத் தொகுதி காலியாக உள்ளதாக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. இதனால் விக்கிரண்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுவாக பதவியில் இருக்கும் ஒருவர் மறைந்தாலோ அல்லது  அவர் வகித்திருக்கும் பதவியை ராஜினாமா செய்தாலோ அந்தத் தொகுதியில், ஆறு மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது சட்டமாகும் என்பது நாம் அறிந்ததே.


விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஜூலை 10ஆம் தேதி விக்ரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ம் தேதி  தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24ம் தேதி நடைபெறும்.இந்த மனுக்களை திரும்ப பெற வரும் 26ம் தேதி கடைசி நாள். அன்றே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து ஜூன் 10ஆம் தேதி விக்ரவாண்டி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது. 


தேர்தல் தேதி நெருங்கி வருவதை முன்னிட்டு, பல கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில்,திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் ஐ பெரியசாமி, பொன்முடி, சக்கரபாணி ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஜூலை 6,7,8 ஆகிய 3 நாட்கள் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்