- பா. பானுமதி
விஷால் இரண்டு வயது பாலகன். விஷாலும் அவனது அம்மாவும் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்து ஏறி பள்ளிக்குச் செல்வார்கள். நத்தத்தில் பழ வியாபாரம் அந்த காலை வேளையில் மிக சிறப்பாக நடக்கும். மாம்பழ சீசன், கொய்யாப்பழ சீசன், நாவல் பழ சீசன் களை கட்டும் .
பாட்டிகள் கூட நிறைய பழங்களை வாங்கிக் கொண்டு சென்று வியாபாரம் செய்வார்கள். அருகிலே மேல்நிலைப்பள்ளி ஒன்று உண்டு. அங்குள்ள மாணவர்கள் நித்தமும் பாட்டியிடம் வம்பு பண்ணுவார்கள். காசுகொடுக்காமல் பழங்களை எடுத்துச் செல்வதும் பாட்டிகள் வசை பாடுவதும் தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகள். இதை கண்முன்னே கண்டவாறு விஷாலும் அவனது அம்மாவும் பள்ளிக்குச் செல்வார்கள்.
ஒருநாள் பேருந்து பிடிக்க வேகமாக சென்று கொண்டிருக்கும்போது அம்மாவின் கையை பற்றி இருந்த விஷால் சட்டென அம்மாவின் கையை விட்டுவிட்டு வேகமாக ஓடி பழகூடை அருகே சென்றான். அச்சச்சோ பாட்டியிடம் வசவு வாங்க போகிறான் என பதறியவாறு அம்மா பின்னால் செல்ல அங்கு நடந்ததோ வேறு .

கூடையில் இருந்து கீழே சிந்திருந்த பழங்களை எடுத்து தன் பிஞ்சு கரங்களால் கூடையில் எடுத்து வைக்க
ஏ..... என்று கத்திக் கொண்டே வந்த பாட்டியும் ஆச்சரியப்பட்டு கன்னத்தில் கை வைத்தாள். பின்பு ஏதும் நடக்காதவாறு வந்து அம்மாவின் கையை பிடித்துக் கொண்டான். அதைப் பார்த்து மகிழ்ந்த பாட்டி நன்றாக பிள்ளையை வளர்த்திருக்கிறாய் என்று பாராட்ட அம்மாவிற்கு அப்பாடி என்று இருந்தது .
பாட்டி தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள இரண்டு சிறு கொய்யா காய்களை எடுத்து விஷாலுக்கு கொடுக்க விஷாலோ அதை வாங்காமல் அம்மாவை அனுமதிக்கு நோக்க அம்மாவும் கண்ணைக் காட்ட பின் வாங்கிக்கொண்டு செய்த செயல் தான் அங்கு இருந்த அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
ஆம் பாட்டியிடம் இருந்து வாங்கி கொய்யாக்காயை எடுத்து பாட்டிக்கே ஊட்டி விட முனைந்தான்.
பேர் சொல்லும் பிள்ளை என்று அனைவரும் பாராட்டினர்.
சமத்துப் பிள்ளை.. விஷாலின் விளையாட்டு தொடரும்!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
யுகாதி எனப்படும் தெலுங்கு வருடப் பிறப்பு
ஒரு பிடி மாங்காய் ஊறுகாயும்.. மனதுக்குள் ஊறிக் கிடக்கும் உணர்வும்!
5 தலைநகரங்கள், சாதியற்ற இட ஒதுக்கீடு" - நாம் தமிழர் தேர்தல் அறிக்கை 2026 ஐ வெளியிட்டார் சீமான்
பாட்டி வைத்தியம் (ஒரு நிமிடக் கதை)
விஷாலின் விளையாட்டுகள்.. பேர் சொல்லும் பிள்ளை!
ஐம்பூதங்கள்!
புதுச்சேரி கூட்டணி விவகாரம்...டில்லியில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை
ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
கத்தார் இயற்கை எரிவாயு நிலையத்தை அதிரடியாகத் தாக்கிய ஈரான்.. அமெரிக்கா அதிர்ச்சி
{{comments.comment}}