விஷ்ணுபதி புண்ணிய காலம் 2025 : புண்ணியம் சேர பெருமாளை வழிபடும் முறை

May 15, 2025,11:34 AM IST

-ஸ்வர்ணலட்சுமி.


விஷ்ணுபதி புண்ணிய காலம் :   
                   


வைகாசி -1 20 25 மே மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை  வைகாசி ஒன்றாம் தேதி பகவான் விஷ்ணுவை மனதார வழிபாடு செய்வதற்கு உகந்த காலம் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம். வருடத்தில் நான்கு நாட்கள் அதாவது வைகாசி- 1 , ஆவணி-1  கார்த்திகை -1 , மாசி -1இந்த நான்கு நாட்கள் விஷ்ணுபதி புண்ணிய காலம் வருகிறது.


வியாழக்கிழமையும் வைகாசி -1 இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் சேர்ந்து வந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நன்னாளில் பெருமாளை வழிபடுபவருக்கு பாவ கணக்குகள் குறையும் என்றும் அவரவர் பாவக்கணக்குகள் குறையும் பட்சத்தில் புண்ணியம் தானாக வந்து சேர துவங்கும். அவ்வாறு புண்ணியம் தானாக சேர துவங்கும்போது காசு, பணம் சேர துவங்கி சேமிப்பு அதிகரிக்கும். பாவங்கள் குறைய குறைய கடனும் அதிவிரைவாக  குறைவதை நீங்கள் உணரலாம்.




நேரம் : 


மே மாதம் 15ஆம் தேதி இரவு 1:30 மணி முதல் காலை 10 :00மணி வரை விஷ்ணுபதி புண்ணிய காலம் வருகிறது .எனவே காலை 5 மணியிலிருந்து அருகில் உள்ள பெருமாள் கோவில்களில் வழிபாடு செய்வது மிகச் சிறப்பு.


வழிபாடு :


கொடி மரம் இருக்கும் பெருமாள் கோவிலில் கொடி மரத்தோடு சேர்ந்து பெருமாளை வலம் வரும் பொழுது நமக்கு வழிபாட்டின் முழு பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பெருமாளை 27 முறை சுற்றி வந்து துளசி மாலைகள் ,வெற்றிலை, பாக்கு ,தேங்காய் பழம் கொடுத்து அர்ச்சனை செய்வது சிறப்பு. ஒவ்வொரு முறை சுற்றி வரும் பொழுதும் 27 பூக்களை கையில் வைத்துக் கொண்டு அந்த பூக்களை கொடி மரத்தில் வைத்து எண்ணிக்கொண்டு மனதார பெருமாளை நினைத்துக் கொண்டு கோவிந்தா நாமம் கூறி வழிபடுவது சிறப்பு.


நான்கு வரி மந்திரம்:


விஷ்ணு சகஸ்ரநாமம் 


"ஸ்ரீ ராம ராம ராமே தி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத் துல்யம் ராம நாம வரானனே" இந்த மந்திரம் சொல்லி 27 முறை பெருமாளை வலம் வருவது நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். பெருமாளின் 1008 நாமங்கள் அனைவராலும் சுலபமாக படிக்க இயலாது, எனவே அவரவர் வேலைகளுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப இந்த நான்கு வரி மந்திரம் படிக்க விஷ்ணு சகஸ்ரநாமம் முழுமையாக படித்த புண்ணியம் கிடைக்கும்.


காரியத்தடையில் விலகி சுபிட்சம் பெற :


"ஓம் அனிருத்ரனே நம ஹ" என்னும் மந்திரம் கூறி வழிபாடு செய்யுங்கள். கோவிந்தா !நாராயணா! ஓம் நமோ நாராயணா! என்று கூறி வழிபட  நாம் அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று நீடூழி வாழ்வோமாக.


மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்