தளபதி 'வி'ஜய்  தான் தொடங்கி வைத்தார்.. "வி" சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகும்.. நடிகர் சதீஷ் புகழாரம்!

Feb 13, 2024,04:07 PM IST

சென்னை: தளபதி விஜய் சார் தான் இந்த படத்தை துவங்கி வைத்தார். வி சென்டிமென்ட் எங்களுக்கு ஒர்க் அவுட் ஆகும். அதனால் படத்தை தொடங்கி வைத்த வி நடிகர் பெயரே, சென்டிமெண்டாக படத்தின் டைட்டில் 'வி' வித்தைக்காரன்  தான். அதனால் இப்படம் வெற்றியாக அமையும் என நம்புகிறேன் என நடிகர் சதீஷ்  கூறியுள்ளார்.


தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் தற்போது காமெடி மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். நாய் சேகர் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சுரிங் கண்ணப்பன் குழந்தைகளுக்கு பிடித்த திர்லரான காமெடி கலந்த திரைப்படமாக அனைவரின் பாராட்டையும் பெற்றது. தற்போது சதீஷ் நாயகனாக  வித்தைக்காரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது.





நடிகர் சதீஷ் நடிக்கும் வித்தியாசமான ஹெய்ஸ்ட் (கொள்ளை) திரைப்படம்தான் வித்தைக்காரன். ஒயிட் கார்ப்பரேட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில்,  இயக்குனர் வெங்கட் அறிமுகமாகிறார். இப்படத்திற்கு யுவ கார்த்திக் ஒளிபரப்பு செய்ய, விபிஆர் இசையமைத்துள்ளார்.


கொள்ளையும் அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களை முழுக்க முழுக்க பிளாக் காமெடி கலந்த திரைக்கதையை மையமாகக் கொண்டு இப்படம் வித்தியாசமான காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளதாம். இப்படத்தில் நடிகர் சதீஷ், நடிகை சிம்ரன் குப்தா, ஆனந்த் ராஜ், மதுசூதனன், ராவ், சுப்பிரமணிய சிவா, ஜான் விஜய், ஆசிஃப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.




இந்நிலையில் வித்தைக்காரன் திரைப்படம் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதுகுறித்து நடிகர் சதீஷ் கூறுகையில்


தமிழக மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டு படம் பார்த்ததற்கு நன்றி. தளபதி விஜய் சார் தான் இந்த படத்தை துவங்கி வைத்தார். அவருக்கு என் முதல் நன்றி. என்னைச் சமீபத்தில் சந்தித்த போது கான்ஜூரிங் கண்ணப்பன் பார்த்ததாகச் சொன்னார். அவர் பாராட்டியது மிகப்பெரிய சந்தோஷம். இயக்குநர் வெங்கி தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். ‘V’ செண்டிமெண்ட் எங்களுக்கு ஒர்க் அவுட் ஆகி வருகிறது. படம் ஆரம்பித்து வைத்த விஜய் சார், இயக்குநர் வெங்கி, பட டைட்டில் வித்தைக்காரன் என எல்லாம் ‘V’ தான். இப்படம் வெற்றியாக அமையுமென நம்புகிறேன். 


ஆனந்தராஜ் சார், இயக்குநர் சுப்பிரமணிய சிவா என எல்லோரும் நல்ல ரோல் செய்திருக்கிறார்கள். ஆனந்தராஜ் சாரை எல்லாம் சின்ன வயதில் பார்த்து பயந்திருக்கிறேன். இப்போது அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. சிம்ரன் குப்தா தமிழே தெரியாமல், டயலாக் மக்கப் பண்ணி அத்தனை அர்ப்பணிப்புடன் நடித்தார், அவருக்கு வாழ்த்துக்கள். 




இந்தப் படம் நல்ல ஒரு முயற்சியாக செய்துள்ளோம். எங்களை நம்பிய தயாரிப்பாளருக்கு நன்றி. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி என்றார்.


நாயகியான நடிகை சிம்ரன் குப்தா பேசுகையில்,  தயாரிப்பாளர் விஜய் சார், இயக்குநர் வெங்கி ஆகியோருக்கு நன்றி. வித்தைக்காரன் எனக்கு முக்கியமான படம். எனது திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். எனக்கு ஆதரவு தந்த சதீஷ்க்கு நன்றி. வித்தைக்காரன் கண்டிப்பாகச் சிறந்த வெற்றி படமாக இருக்கும் நன்றி எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!

news

மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

அதிகம் பார்க்கும் செய்திகள்