நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த கோ ஒர்க்கிங் நிறுவனமான விஒர்க் திவாலாகியுள்ளது. தவறான நிதிக் கொள்கை மற்றும் கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவையே இந்த நிறுவனம் திவாலாக முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
நியூயார்க்கைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம்தான் விஒர்க். ஒரு காலத்தில் படு வேகமாக முன்னேறி வந்த நிறுவனம் இது. 47 பில்லியன் டாலர் வரைக்கும் இதன் சொத்து மதிப்பு ஒரு கட்டத்தில் உயர்ந்தது. ஆனால் நீர்க்குமிழி போல இப்போது அது உடைந்து சிதறி பூஜ்யத்திற்கு வந்து நிற்கிறது.
இந்த நிறுவனம் ஆரம்பத்தில் வெளியிட்ட ஐபிஓ முயற்சிகள் பெரும் குழப்பமாகி விட்டன. இதனால்தான் இந்த நிறுவனம் சரிவைச் சந்திக்க நேரிட்டது. மேலும் இந்த நிறுவனத்தின் கோ ஒர்க்கிங் மாடலும் எடுபடவில்லை. இடையில் வந்த கோவிட் லாக்டவுன் காலத்தின் தாக்கமும் சேர்ந்து கொண்டு நிறுவனத்தை சரித்து விட்டது.
5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நிறுவனம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தது. அதன் ஐபிஓக்கள் உலக அளவில் பேசப்பட்டன. ஆனால் இன்று அதன் மதிப்பு பூஜ்யத்தைத் தொட்டு விட்டது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை தற்போது 1 டாலருக்குக் கீழ் போய் விட்டது. தற்போது விஒர்க் நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதிக் கையாள்கையை சரியாக மேற்கொள்ளாமல் போனது, சரியான நிர்வாகத்தை மேற்கொள்ளாதது என்று பல குழப்பங்கள் சூழ்ந்ததால்தான் விஒர்க் நிறுவனம் மூழ்கிப் போயுள்ளது. பலருக்கும் இது நல்ல பாடமாகும்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}