சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம், 53,520 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 3 நாட்களாக ஒரே விலையில் இருந்து வந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது. தங்கம் விலை மட்டும் அல்ல வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தேவை இருப்பதன் காரணமாக நகை கடைகளில் நகைகளை மக்கள் வாங்கி வருகின்றனர். சமீப காலமாகவே தங்கம் விலை நிலையற்ற நிலையிலேயே இருந்து வருகிறது.
சென்னையில் இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,685 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.40 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 ஆக உள்ளது.

8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,520 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,298 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,384 ஆக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.66,900 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,69,000க்கு விற்கப்படுகிறது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.72,980 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,29,800க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து உள்ளது.கடந்த 26ம் தேதி முதல் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்று வரை அதே விலையிலேயே இருந்து வந்தது. இன்று மட்டும் சற்று உயர்ந்து 1 கிராம் வெள்ளி விலை 0.80 காசுகள் அதிகரித்து ரூ.95.50க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 764 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.955 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,550 ஆக உள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.95,500க்கு விற்கப்படுகிறது.
தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு
ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்
சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்
பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி
Beautiful things don't ask for attention
{{comments.comment}}