பாஜக கூட்டணியால்.. அதிமுகவிலிருந்து விலகிட்டாரா.. டி. ஜெயக்குமார் தரப்பு சொல்லும் விளக்கம் இதுதான்!

Apr 14, 2025,01:38 PM IST

சென்னை: பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்துக் கொண்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அமைதி காத்து வருகிறார். அவர் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை. அரசியல் பேசவும் இல்லை. அமைதியாக இருந்து வருகிறார்.


அதிமுக - பாஜக கூட்டணி முறிவதாக கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு  கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன் பிறகு தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தவர்களில் முன்னோடியாக இருந்தவர் டி. ஜெயக்குமார்தான். கடுமையாக பதிலடி கொடுத்து வந்தார். பாஜக வைக்கும் ஒவ்வொரு விமர்சனத்துக்கும் முதல் ஆளாக ஜெயக்குமார்தான் விமர்சிப்பார்.


அதிலும் அண்ணாமலைக்கு சரிக்கு சரியாக கருத்துக்களை வைத்து வந்தவர் ஜெயக்குமார். ஆனால் திடீரென பாஜகவுடன் கூட்டு வைக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்தது கட்சியின் பல சீனியர்களுக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதில் ஜெயக்குமாரும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் அவர் சைலன்ட்டாகி விட்டதாக  கூறப்படுகிறது. அதேசமயம், அவர் அதிமுகவை விட்டு விலகி விட்டதாகவும் தகவல்கள் பரவின.




இதை ஜெயக்குமார் தரப்பு மறுத்துள்ளது. ஒருபோதும் நான் வேறு கட்சியின் வாசலில் போய் நிற்க மாட்டேன். எப்போதுமே அதிமுகதான் என்று ஜெயக்குமார் கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம், பாஜக கூட்டணி குறித்து ஜெயக்குமார் கருத்து ஏதும் சொல்லவில்லை. அதில் தொடர்ந்து அவர் மெளனம் காக்கிறார். இதன் மூலம் பாஜக கூட்டணி தனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட அதிமுகவில் நீடிக்க அவர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.


இதற்கிடையே கடந்த 9ம் தேதிக்குப் பிறகு இப்போததான் மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவு போட ஆரம்பித்திருக்கிறார் டி.ஜெயக்குமார்.  தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில், தொன்று தொட்டு தொடர்ந்த தமிழரின் மரபை மாற்றினார் தமிழின எதிரி கருணாநிதி! சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாய் மீண்டும்‌ அறிவித்தார் தமிழர்களின் தங்கத் தலைவி அம்மா!


இனி எத்தனை நாளை‌ வந்தாலும் சித்திரை ஒன்றே என்றும் தமிழர்களின் புத்தாண்டு! தமிழ் மக்களின் நலன் காத்த தாயின் ஆணையின்படி சட்ட பேரவை தலைவராக எனது தலைமையில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு விழா... இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை

news

எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!

news

மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!

news

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு

news

மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!

news

தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!

news

மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!

அதிகம் பார்க்கும் செய்திகள்