சென்னை : தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நாளை (09.10.2026) வெளியாக உள்ளது.
இதில் வெற்றி பெற போவது யார் என்பது துல்லியமாக கணிக்க முடியாத நிலை உள்ளதால், நாளை என்ன நடக்கும்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இந்த இடைத் தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றால், என்ன நடக்கும் என்பதை சுவாரஸ்யமாக, சற்று ஆழமாக ஆராய்ந்து பார்க்கலாம்.
இடைத்தேர்தல் ஏன்?
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, எம்எல்ஏ.,வாக பதவியேற்ற பிறகு சில எம்எல்ஏ.,க்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் வந்து இணைந்தனர்.
அதிமுக எம்எல்ஏ.,க்கள் 6 பேர் ராஜினாமா செய்ததாலும், தான் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு தொகுதியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததாலும் மொத்தமாக 7 தொகுதிகள் காலியானதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதிமுக எம்எல்ஏ.,க்களின் ராஜினாமாவை எதிர்த்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளதால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அக்டோபர் 06ம் தேதி நடத்தப்பட்டது. மீதமுள்ள 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல், கோர்ட் அனுமதி அளித்த பிறகே நடைபெறும்.
யார் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?

சட்டசபை தேர்தலுக்கு இணையான பரபரப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர், இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டதால் ஐந்து முனை போட்டி நிலவியது.
ஆளும் தவெக, அதிமுக எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்கியதால் தான் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது என அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரச்சாரம் செய்தன. ஆனால் சட்டசபை தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு துரோகம் செய்து விட்டு திமுக-அதிமுக கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததால் தான் இந்த இடைத்தேர்தல் நடந்துள்ளது என தவெக பிரச்சாரம் செய்தது.
இதில் யாருடைய வாதத்தை எடுத்துக் கொண்டு, யாருக்கு மக்கள் தங்கள் ஆதரவை அளித்துள்ளார்கள் என்ற கேள்விக்கு நாளை விடை தெரிந்து விடும்.
தவெக வெற்றி பெற்றால்...
1. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால், சட்டசபையில் தவெக.,விற்கு சட்டசபையில் பலம் அதிகரிக்கும். இரண்டு எம்எல்ஏ.,க்கள் கூடுதலாக இணைவதால் தவெக எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரிக்கும்.
2. முதல்வர் விஜய் மீதும், நான்கு மாத தவெக ஆட்சி மீது மக்கள் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்த ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புவதும், திராவிட கட்சிகளை முற்றிலுமாக புறக்கணிக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று தவெக வலுவாக கூறும்.
3. இரண்டு தொகுதிகளிலும் தவெக வென்றால் அதிமுக.,வில் இருந்து மட்டுமல்ல, திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் பலரும் தவெக.,வில் வந்து இணைய வாய்ப்புள்ளது. அதோடு தவெக.,வில் இருக்கும் எம்எல்ஏ.,க்கள் மற்ற கட்சிகள் எத்தனை கோடி கொடுத்தாலும் அவர்கள் பக்கம் செல்ல மாட்டார்கள். தவெக தப்பும். பிற கட்சிகள் ஆட்டம் காணும்.
4. ஒரு வேளை ஏதாவது ஒரு தொகுதியில் மட்டும் தவெக வெற்றி பெற்றால், கூட்டணிக் கட்சிகளின் தவெக மீதான அபிமானம், பிரியம், பாசம் உள்ளிட்டவற்றின் வேகம் சற்று குறையும்.
5. ஒருவேளை இரண்டிலும் தவெக தோல்வி அடைந்தால் தவெகவிலிருந்து சிலரை இழுக்கும் திமுக அதிமுகவின் முயற்சிகள் மேலும் வேகமடையும். கூட்டணிக் கட்சிகளும் தவெக மீதான அசைக்க முடியாத நம்பிக்கையிலிருந்து சற்று விலகி நிற்க முயற்சிப்பார்கள். அது அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.
அதிமுக வெற்றி பெற்றால்...
1. மதுராந்தகம், தாராபுரம் இரண்டுமே அதிமுக செல்வாக்குள்ள, அந்த கட்சி வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால் மீண்டும் அந்த தொகுதிகளை அதிமுக தன் வசப்படுத்தினால், அது அதிமுக மீண்டும் புத்துயிர் பெற மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.
2. பிளவு பட்டுள்ள அதிமுக மீண்டும் ஒன்றிணைந்து, பலப்பட வாய்ப்பு ஏற்படும். அதாவது அதிமுக மேலும் பிளவுபட வாய்ப்பில்லாமல் போய் விடும்.
3. அதிமுக.,வில் இருந்து விலக மற்ற கட்சிகளில் இணைந்தவர்கள் மீண்டும் அதிமுக.,விற்கு திரும்ப வாய்ப்பு ஏற்படும்.
4. கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கை இன்னும் ஓங்கும்.
5. எடப்பாடி பழனிச்சாமி தலைமை பொறுப்பு ஏற்றது முதல் அதிமுக தோல்வியை மட்டுமே சந்திக்கிறது என்ற அவப் பெயர் நீங்கும்.
திமுக வெற்றி பெற்றால்...
1. மக்கள் திமுக மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது நிரூபனம் ஆகும். அதிமுக கோட்டையை திமுக கைப்பற்றி விட்டதாகவும் திமுக பிரச்சாரம் செய்ய வாய்ப்பாகும்.
2. தவெக அரசு மீது திமுக முன் வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதும், தவெக மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதும் வெட்ட வெளிச்சம் ஆகி விடும்.
3. திமுக இன்னும் அதிக வேகத்துடன் தவெக அரசை எதிர்க்க துவங்கும்.
4. அடுத்தடுத்த இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல்களில் திமுக இன்னும் தீவிரமான எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்கும். இது திமுக.,வின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு ஆரம்பமாக அமையும்.
ஆக மொத்தம் இந்த இடைத் தேர்தல் முடிவு 3 கட்சிகளுக்கும் விதம் விதமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. நாளை இந்நேரம் எல்லாவற்றுக்கும் விடை தெரிந்து விடும்.
அவன் அப்படிதான்!
If you obey all the rules, you miss all the fun
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
Short Story: தங்கக்கட்டி நடைபாதை
ஏன் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
பிரியாவிடை!
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் இன்று விருந்தளிப்பு
{{comments.comment}}