மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

Dec 18, 2025,09:18 PM IST
சென்னை:  மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க அறிக்கை விட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் னெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க., அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி! 

VBGRAMG திட்டத்தில் 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே!

100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதற்கான ஊதியத் தொகையையும் திட்டச் செலவையும் மாதக் கணக்கில் விடுவிக்காமல் வஞ்சித்தனர். அந்த நிலுவைத் தொகையையும் நாம் போராடிப் பெற வேண்டிய அவலம்தான் இருந்தது.






தற்போது, ஒன்றிய அரசின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது.

திட்டச் செலவில் 40% தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, GST வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை; தண்டனை!

கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த MGNREGA திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்குத் திருவாளர் பழனிசாமி அவர்கள் வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்!


நாம் தட்டி எழுப்பிய பின் துயில் கலைந்து, MGNREGA திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்  தனது ஸ்டைலில் அழுத்தம் கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

அத்தோடு, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். 125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர்? 

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, Delimitation மூலமாகத் தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர். 

ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்திய MGNREGA திட்டத்தைச் சிதைத்து, நிதிச் சுமையை மாநிலங்களின் தலையில் VBGRAMG கட்டுவதைப் பற்றியும் வாய்திறக்க அவருக்கு வலிக்கிறது போலும். தனது 'Owner' பா.ஜ.க செய்வது சரி என்றால், துணிச்சலாக, வெளிப்படையாக VBGRAMG-யை எடப்பாடி பழனிசாமி அவர்களால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

Folk song by PS Murugesan: பட்டிக் காட்டு மாமன் என்னை கட்டிக் கொள்ள வா புள்ளே!

news

பாஸ்போர்ட் என்றால் என்ன.. அதை எப்படி எடுக்கணும்.. மாணவர்களுக்கு சூப்பர் கிளாஸ்!

news

தேவதை போல் நீ நடந்து.. பட்டுப்புடவை அணிவதன் மகிமை என்னன்னு தெரியுமா?

news

இந்தக் காதலை மட்டும்...கட்டுப்படுத்த முடியலையே!

news

உசுரே நீதானே ஒறவாய் வருவேனே..

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

அதிகம் பார்க்கும் செய்திகள்