விமானங்களில் ஷாட்ஸ் அணிந்து பயணிப்பது நல்லதில்லை.. ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

Dec 15, 2024,03:53 PM IST

டில்லி : அனைத்து நாடுகளிலும் உள்நாட்டு மற்றம் வெளிநாட்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் ஷாட்ஸ் எனப்படும் அரைக்கால் டவுசர் அணிவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள். இதற்கு என்ன காரணம்? எதற்காக இந்த அறிவுரை என பலருக்கும் தெரியாது.


கோவில்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சில இடங்களில ஆடை கட்டுப்பாடு இருப்பது போல் விமானங்களிலும் ஆடைக் கட்டுப்பாடு விமானத்தில் கடைபிடிக்கப்படுவதாக தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  பெரிய அளவில் ஆடைக் கட்டுப்பாடு இல்லாவிட்டாலும் கூட, சில ஆடைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் இந்த கட்டுப்பாடு உண்மையில் என்ன காரணத்திற்காக கொண்டு வரப்பட்டது என்பதை யாருக்கும் யோசித்து இருக்கக் கூட மாட்டார்கள். 




விமான சீட்கள் எப்படி இருக்கும் என அனைவருக்கும் தெரியும். இந்த இருக்கையில் உலோகங்கள் அல்லாத ஐந்து விதமான பொருட்களால் தயார் செய்யப்படுகின்றன. அதாவது ரப்பர் குஷன், தீப்பிடிக்காத உறைகள், பிளாஸ்டிக் மோல்ட் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தான் தயாரிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒவ்வொரு விமானமும் பல ஆயிரம் பயணிகளை ஏற்றிக் கொண்டு, பலமுறை பயணிக்கின்றன. இதனால் எந்த சீட்டில் யாரெல்லாம் பயணிப்பார்கள் என யாருக்கும் தெரியாது.


இந்த விமான இருக்கைகள் ஒவ்வொரு முறை பயணத்திற்கு பிறகும் சுத்தம் செய்யப்படுவது கிடையாது. அடுத்தடுத்த விமான சேவைகளை பயணிகளுக்கு வழங்க வேண்டி உள்ளதால் அவர்களுக்கு அதற்கு நேரமும் கிடையாது. இதனால் ஒவ்வொரு சீட், ஜன்னல், நம்முடைய சீட்டிற்கு முன்பு இருக்கும் டிரே டேபிள் ஆகியவற்றில் ஏராமான கிருமிகள் உருவாகி இருக்கும். நீங்கள் ஷாட்ஸ் போன்ற உடைகளை அணிந்து சென்று அந்த சீட்களில் உட்காரும் போது அவற்றில் இருக்கும் கிருமிகள் உங்களின் தோல்களில் ஒட்டிக் கொண்டு, பலவிதமான நோய்கள் உங்களை தாக்க வழி ஏற்படுகிறது. 


குறிப்பாக குழந்தைகளுடன் பயணிக்கும் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் பலரும் அதை செய்ய தவறுவதால் விமானத்தின் பல இடங்களிலும் ஒட்டி இருக்கும் கிருமிகளால் பலருக்கும் பலவிதமான நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. அதே சமயம், நீங்கள் பேண்ட் போன்ற முழுவதுமாக உடலை மறைக்கும் ஆடைகளை அணிந்து செல்லும் போது, அந்த கிருமிகள் நேரடியாக உங்களை தாக்காமல் இருப்பதால் நோயால் தாக்கப்படும் தன்மை குறைகிறது. 




விமான சீட்களில் மட்டுமல்ல ஜன்னலோர சீட்களில் அமரும் போதும், ஜன்னல்களை தொடும் போதும் இதை நிலை தான் ஏற்படுகிறது. குழந்தைகள் வேடிக்கை பார்ப்பதற்காக ஆர்வமாக சென்று ஜன்னல்களை தொடுவது இயல்பு தான். ஆனால் அதனால் நோய்கள் ஏற்படும் என்பது அவர்களுக்கு தெரியாது. இதே போல் விமான கழிவறைகள், டிஸ்யூ, நாப்கின் போன்றவற்றை பயன்படுத்தும் போதும் இதை போன்ற பிரச்சனைகள் தான் ஏற்படும். அதனால் தான் விமான பயணிகள் ஷாட்ஸ் அணிந்து வருவது தவிர்க்குமாறு கூறப்படுகிறது. 


விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கான மற்றொரு முக்கியமான அட்வைஸ் என்னவென்றால், ஒவ்வொரு முறை பயணிக்கும் போது குறைந்தபட்சம் 16 அவுண்ஸ் அளவிற்காவது தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். காரணம், விமானத்தில் காற்றின் அளவு குறைவாக இருக்கும். இதனால் உடலில் உள்ள நீர் உறிஞ்சப்பட்டு, உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்காகவும், நீரின் அளவை சமநிலையில் வைத்திருப்பதற்காகவும், விமான பயணத்தின் போது போதிய அளவு தண்ணீர் குடிப்பது மிக மிக அவசியம் ஆகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்