சென்னை : திமுக-அதிமுக இருவரும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முயற்சியை முன்னெடுத்ததே தேமுதிக கட்சியின் பொருளாரான எல்.கே.சுதீஷ் தான் என்ற உண்மையை தற்போது இடதுசாரிகள் வெளிப்படையாக உடைத்து பேசி இருப்பது தமிழக அரசியல் களத்தையும், மக்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தாலும் 108 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
தவெக ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்குமா? தவெக.,விற்கு பெரும்பான்மை கிடைக்கா விட்டால் அடுத்து என்ன நடக்கும்? என ஒட்டுமொத்த தமிழகமே தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் கூட மிக ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தனர். தேர்தல் ரிசல்ட் வெளியாகும் நாளை விட, அதற்கு பிறகு தான் தமிழகமே திக்..திக் நிமிடங்களை எதிர்கொண்டது.
தவெக.,விற்கு யாரெல்லாம் ஆதரவு தரப் போகிறார்கள்? விஜய் முதல்வர் ஆவாரா என அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கையில் யாரும் எதிர்பாராத விதமாக திமுக-அதிமுக இரண்டு கட்சிகளும் ஒன்ணிணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்வதாக ஒரு பகீர் தகவல் வெளியானது.

இது எப்படி சாத்தியம்? அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என சாமானிய மக்கள் அடித்துச் சொன்னாலும், கட்சியின் முக்கிய புள்ளிகளே, அப்படி ஒரு முயற்சி நடந்தது உண்மை தான் என உறுதியாக சொன்னார்கள். சிலர் இதையே காரணமாக சொல்லி அதிமுக.,வில் இருந்து விலகி தவெக.,வில் சென்று இணைந்தனர்.
அதிமுக-திமுக இணைந்து ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தை நடந்தது மட்டுமல்ல, இப்படி ஒரு ஐடியாவை கொடுத்து, இந்த முயற்சிக்கு பிள்ளையார்சுழி போட்டது யார் என்பதை சமீபத்தில் தனியார் டிவி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோர் உண்மையை உடைத்துள்ளனர்.
பெ. சண்முகம் நிகழ்ச்சியில் பேசும்போது கூறுகையில், தேமுதிக சுதீஷ் தான் அதிமுக-திமுக.,வை இணைக்கும் முயற்சியை செய்தது என்ற பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர். அதோடு, சுதீஷ் இந்த ஐடியாவை சொன்னதும், மக்கள் இதை ஏற்க மாட்டார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்து விட்டதாகவும், அதனால் தான் இந்த பேச்சு அதற்கு மேல் தொடரவில்லை என்றும் போட்டு உடைத்துள்ளார்.
விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு, நம்பிக்கை ஓட்டெடுப்பில் தனக்கு ஆதரவாக ஓட்டளித்தவர்கள் மட்டுமின்றி, பாரபட்சம் இல்லாமல் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்து, வாழ்த்து பெற்று விட்டு வந்தார். தேர்தல் களத்தில் தன்னை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை கூட சென்று சந்தித்தார். ஆனால் விஜய்யை தங்கள் வீட்டு பிள்ளை, தம்பி என சொன்ன தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை, விஜய் சந்திக்கவே இல்லை.
அதே போல் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களை சந்தித்தாரே தவிர, கட்சி தலைமையான எடப்பாடி பழனிச்சாமியை சென்று அவர் சந்திக்கவே இல்லை. அதாவது, தான் ஆட்சி அமைப்பதை தடுக்க தனக்கு எதிராக சதி செய்தவர்களை மட்டும் தவிர்த்து விட்டு, மற்றவர்களை மரியாதை நிமித்தமாக சென்று விஜய் சந்தித்து விட்டு வந்துள்ளார் என்பதையே இது காட்டுகிறது. இதனால்தான் தனது ஆட்சிக்கு ஆதரவு தேவை என்ற இக்கட்டான நிலை இருந்தபோதும் கூட தேமுதிகவை விஜய் அணுகவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
விஜய் அரசியலுக்கு புதியவர் என பலரும் விமர்சித்தனர். ஆனால் அரசியலையும், தனக்கு எதிரானவர்கள் யார் என்பதையும் நன்கு புரிந்து கொண்டு தான் விஜய் களமாடி வருகிறார் என்பதை இந்த ஒரு நிகழ்வே தெளிவுபடுத்தி காட்டுகிறது.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}