திமுக.,வில் ஓபிஎஸ்.,க்கு என்ன பதவி ? சட்டை பையில் ஸ்டாலின் படம் மாறுமா?

Feb 27, 2026,06:05 PM IST

சென்னை : தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிராபாராத புதிய திருப்பமாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத்துடன் சென்று திமுக.,வில் இணைந்துள்ளார்.  ஓபிஎஸ்.,க்கு போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளதாகவும், திமுக.,வில் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


ஓபிஎஸ்.,ன் அரசியல் வாழ்க்கை :




பல ஆண்டுகளாக அதிமுக.,வில் இருந்து, 2001ம் ஆண்டு முதல் முறையாக எம்எல்ஏ., ஆன ஓ.பன்னீர்செல்வம், அதே ஆண்டிலேயே தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கும் வாய்ப்பையும் பெற்றார். டான்சி நில ஊழல் வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பதவி இழக்க நேரிட்ட போதும், பிறகு சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற போதும் ஓபிஎஸ் தான் ஜெயலலிதாவிற்கு பதில் தமிழக முதல்வர் பதவியை ஏற்றார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக, அவர் கட்சியின் அடிப்படை பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்பட்டார்.


உதயசூரியனுக்காக பிரச்சாரம்:


எந்த கட்சியிலும் இல்லாமல் இருந்ததால் 2024 லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். மீண்டும் அதிமுக.,விலும், என்டிஏ கூட்டணியில் இணைவதற்கு ஓபிஎஸ் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், தற்போது திமுக.,வில் சென்று இணைந்துள்ளார். இதனால் தமிழக சட்டசபை தேர்தலில் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அப்படி உதயசூரியன் சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டு, திமுக.,வறி்காகவும் உதயசூரியன் சின்னத்திற்காகவும் பிரச்சாரம் செய்தால், அது மக்களிடம் எடுப்படுமா என்பது சந்தேகம் தான்.


அதிமுக.,விற்கு நெருக்கடியா?


பல ஆண்டுகளாக அதிமுக.,வின் முகமாக பார்க்கப்பட்ட ஓபிஎஸ், தற்போது திமுக வேட்பாளராக போட்டியிட்டால் அது வாக்காளர்களை குழப்பத்தில் ஆழ்த்தும். இதனால் திமுக.,விற்கு வர வேண்டிய ஓட்டுக்கள், அதிமுக.,விற்கு செல்வதற்கு கூட வாய்ப்புள்ளது. அதை விட, ஓபிஎஸ் இந்த முறை போடி தொகுதியில் போட்டியிட்டால், அவருக்கு போட்டியாக அதிமுக., யாரை வேட்பாளராக நிறுத்தும் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். தேனி, போடி, ஆன்டிப்பட்டி தொகுதிகளை பொறுத்தவரை செல்வாக்கு மிக்கவர்களாக, பிரலமானவர்களாக இருப்பது ஓபிஎஸ், தங்க தமிழ்செல்வன் தான். இவர்கள் இருவருமே தற்போது திமுக.,வில் தான் உள்ளார்கள். இதனால் அந்த தொகுதிகளை கைப்பற்ற அதிமுக யாரை போட்டியிட வைக்க போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.


ஓபிஎஸ்.,க்கு திமுக.,வில் என்ன பதவி?




திமுக.,வில் ஏற்கனவே கனிமொழி, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, மு.பெ.சாமிநாதன் என ஏற்கனவே 7 துணை பொதுச் செயலாளர்கள் இருக்கிறார்கள். இந்த சமயத்தில்  இன்னொரு துணைப் பொதுச் செயலாளர் பதவி ஓபிஎஸ்.,க்காக உருவாக்கப்படுமா என்பது சந்தேகம் தான்.அதிமுக.,வில் இருந்து திமுக.,வில் இதுவரை சென்று இணைந்த சேகர்பாபு, தங்க தமிழ்செல்வன், அன்வர் ராஜா, செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலருக்கும் அங்கு முக்கிய பொறுப்புக்கள், எம்.பி., எம்எல்ஏ, அமைச்சர் பதவிகள் கொடுத்து அழகு பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அனைவரையும் விட மிகுந்த அனுபவம் வாய்ந்த முதல்வர், துணை முதல்வர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் உள்ளிட்ட பல பொறுப்பான முக்கிய பதவிகளில் இருந்தவர் ஓபிஎஸ். அதனால் நிச்சயம் ஓபிஎஸ்.,க்கு இவர்கள் அனைவரையும் விட மிக முக்கியமான பொறுப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுச் செயலாளர் துரைமுருகன் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவரது பொறுப்பு ஓபிஎஸ்.,க்கு கொடுக்கப்படவும் வாய்ப்புள்ளது.


ஜெயலலிதா படத்தை மாற்றுவாரா?




அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தவெக.,வில் சென்று இணைந்துள்ள செங்கோட்டையன், தனது சட்டை பையில் பல காலமாக வைத்திருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தவெக.,வில் இணைந்த பிறகும் கூட வைத்திருந்தார். பிறகு சமீபத்தில் ஜெயலலிதா படத்தை எடுத்து விட்டு, தவெக தலைவர் விஜய் படத்தை வைக்க துவங்கி உள்ளார். அதே போல் பல காலமாக சட்டை பையில் ஜெயலலிதா படத்தை வைத்து பழகியவர் ஓபிஎஸ், அவர் இனி ஜெயலலிதா படத்தை வைப்பாரா அல்லது அவரும் ஜெயலலிதா படத்தை எடுத்து விட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படத்தை வைக்க துவங்கி விடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!

news

தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’

news

Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?

news

பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!

news

இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு

news

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்!

news

சிந்தனைச் சிதறல்.. உறவினும் மேலான ஒரு இதயம் தேவை!

news

உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!

news

ஆசையே அலை போலே!

அதிகம் பார்க்கும் செய்திகள்