சென்னை: டீக்கடை நடத்திக் கொண்டிருந்த ஓபிஎஸ்ஸை ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன் முதல் அமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்திற்கு ஓ.பி.எஸ். துரோகம் செய்துள்ளார் என்று இன்று காலை திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் குறித்து அதிமுக கடும் விமர்சனம் செய்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"ரோஸி டீக்கடை" நடத்திட்டு இருந்த உங்களை, ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம்.
அம்மா வளர்த்த இயக்கத்திற்கு A-Form, B-Form கையெழுத்து போடும் பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அண்ணா திமுக தொண்டர்கள்.
ஆனால் நீங்களோ, உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்! எம்ஜிஆர் மாளிகையில் கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள்! உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்!
பாவம் சும்மா விடுமா? அரசியல் அனாதையாக, இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர்
இரத்தத்தின் இரத்தமான அதிமுக தொண்டர்கள்!
பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்க நடத்திய நாடகமெல்லாம் அம்பலப் பட்டு நின்றதும், வேறு வழியே இல்லை என்றதும், ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே?!
"உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க" என வெட்கமே இல்லாமல் மானங்கெட்டு திரிய வாழ்த்துகள்!
இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற... உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும். (பி.கு. : தயவு செய்து "அம்மா" புகைப்படத்தை துறந்து விடுங்கள். உங்கள் தர்மத்தின் வாழ்வுதனை கருணாநிதியே கவ்விக்கொள்ளட்டும்!) என்று கடுமையாக விமர்சித்துள்ளது அதிமுக.
North East Monsoon On the way: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்
6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Good Evening Friends... சத்தான சுவையான ராகி அடை செஞ்சு சாப்பிடலாமா?
கத்திரிக்காய் நீல கத்திரிக்காய்.. அதிலிருந்து.. சுட்ட கத்தரிக்காய் கொத்சு!
நவராத்திரி.. சோழர் காலத்தில் அரசு விழா.. நாயக்கர்கள் காலத்தில் 9 நாள் திருவிழா!
சமையல் With ஸ்வர்ணா.. முருங்கைக்கீரை தக்காளி ரசம் .. சூப்பாகவும் குடிக்கலாம்
திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!
{{comments.comment}}