பச்சைத் தமிழர் என்று கலைஞரால் பாராட்டப்பட்டவன் நான்.. மகிழ்ச்சியோடு இணைந்துள்ளேன்.. ஓ.பி.எஸ்.

Feb 27, 2026,06:05 PM IST

சென்னை: நான் முதல்வராகப் பொறுப்பேற்ற போது, கலைஞர் அவர்கள் பாசத்தோடு பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம் என்று என்னைப் பாராட்டினார்கள். அதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். தளபதி அவர்களின் சிறந்த ஆட்சியைப் பார்த்து மகிழ்ச்சியோடு என்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


திமுகவில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், திமுகவில் மகிழ்ச்சியோடு இணைந்துள்ளேன். நூறாவது ஆண்டை நெருங்கும் வேளையில், திராவிட இயக்கத்தை அழிப்பதற்கான பல முயற்சிகள் எப்படி ஏற்பட்டாலும், அவற்றைத் தடுத்து நிறுத்தி இயக்கத்தைக் காப்பதில் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் வழியில் நின்று, திராவிடக் கொள்கைகளைக் காப்பாற்றும் முன்னணித் தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.




நான் தாய் கழகத்தில் இணைந்துள்ளேன். சர்வாதிகார ஆணவத்துடன் எடப்பாடி பழனிசாமி நடந்து வருகிறார். அவர் பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை அதிமுகவை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் என்பதை அதிமுக தொண்டர்கள் மிகுந்த வருத்தத்தோடு உணர்ந்துள்ளனர். அந்த வருத்தத்துடன்தான் என்னை நான் இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ளேன். 


தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தலைவர்கூட வளர்ந்து வந்துவிடக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி கவனத்துடன் இருக்கிறார். அவர்களை அழிப்பதிலேயே அவர் முனைப்பு காட்டி வருகிறார். அவரது சர்வாதிகார போக்கால் அதிமுகவால் இனி வெல்லவே முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. அதிமுகவை அவர் அழிவுப் பாதைக்குத்தான் இட்டுச் செல்கிறார்.


நான் முதல்வராகப் பொறுப்பேற்ற போது, கலைஞர் அவர்கள் பாசத்தோடு 'பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம்' என்று என்னைப் பாராட்டினார்கள். அதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். திராவிட இனத்தைக் காக்கவும், திமுகவை வழிநடத்திச் செல்லவும், மக்களை அரவணைத்துச் செல்வதற்கும் சிறந்த இயக்கமாக திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நினைத்து மகிழ்ச்சியோடு இணைந்துள்ளேன். பாசத்தோடு அரவணைத்துக் கொண்ட கழகத்திற்கு நன்றி. ஒரு தொண்டனாகத்தான் இணைந்திருக்கிறேன், நானும் இந்த வளர்ச்சியில் உறுதுணையாக இருப்பேன்.


அதிமுகவில் இருந்த காலகட்டத்திலும் கூட திமுகவை நான் விமர்சித்தது இல்லை. தீய சக்தி என்றெல்லாம் சொன்னதும் கிடையாது. அதிமுகவின் தாய்க் கழகம் இது. எனவேதான் இங்கு வந்துள்ளேன். திமுகவில் இணைய எனக்கு எந்த அச்சமும் இல்லை, அழுத்தமும் இல்லை, கட்டாயமும் இல்லை. மகிழ்ச்சியோடுதான் இணைந்துள்ளேன்.  வரும் சட்டசபைத் தேர்தலில் தளபதி அவர்கள் வாய்ப்பு தந்தால் கட்டாயம் போட்டியிடுவேன். 


சிறந்த முதல்வராக மக்களுக்குப் பாரபட்சம் காட்டாத தலைவராக தளபதி விளங்குகிறார். எல்லாத் திட்டங்களிலும், மக்களுக்குத் தேவையானதைத் தந்து கொண்டிருக்கிறார். அதையெல்லாம் நினைத்துப் பார்த்துதான் இங்கு வந்துள்ளேன் என்றார் ஓ.பி.எஸ்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

North East Monsoon On the way: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

news

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

news

Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்

news

6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

news

Good Evening Friends... சத்தான சுவையான ராகி அடை செஞ்சு சாப்பிடலாமா?

news

கத்திரிக்காய் நீல கத்திரிக்காய்.. அதிலிருந்து.. சுட்ட கத்தரிக்காய் கொத்சு!

news

நவராத்திரி.. சோழர் காலத்தில் அரசு விழா.. நாயக்கர்கள் காலத்தில் 9 நாள் திருவிழா!

news

சமையல் With ஸ்வர்ணா.. முருங்கைக்கீரை தக்காளி ரசம் .. சூப்பாகவும் குடிக்கலாம்

news

திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்