- சகாயதேவி
எல்லோரையும் அண்ணாந்து பார்த்து செய்கிறது. நாம் எல்லோரும் பேசும் ஒரு பேச்சு பொருளாகவே இன்று தங்கத்தின் விலை ஏற்றமும் விலை இறக்கமும் இருக்கிறது. அதைப் பற்றி அலசுவோம்.
முக்கியமா நாம இங்க கவனிக்க வேண்டிய விஷயம் தங்கத்தின் விலை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 14 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. தங்கத்தின் விலை இப்படியே ஏறிக் கொண்டிருந்தால் சாமானியனின் நிலை என்னவாகும். தங்கம் எவ்வளவு விலை கூடினாலும் நாம வாங்கத்தானே செய்கிறோம் என்பறு நாம் பொதுவாகவே சொல்வதுண்டு. ஆனால் ராக்கெட் மாதிரி ஏறிக் கொண்டிருப்பதால் மக்கள் வாங்குவதற்கு மலைக்கும் நிலை வந்துள்ளது.
சில நாட்கள் விலை சற்று குறையும்.. பிறகு கிடுகிடுவென ஏறும். இதுதான் மக்களை குழப்ப வைக்கிறது.. சரி, தங்கத்தின் விலை ஏற்றத்திற்கும் நாம் வாங்குவதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கக்கூடும்.

தங்கத்தின் விலை அமெரிக்க சந்தையை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. சரி இப்படியே போய்க் கொண்டிருந்தால் எப்படிப்பா என்று ஒரு அயர்ச்சி எனக்கு வந்தது. உங்களுக்கும் அதேதான் வந்திருக்கும் இல்லைய. ஒரு தனி மனிதராக நாம் நகையே எனக்கு வேண்டாம், நான் வாங்க மாட்டேன் என்று முடிவெடுத்தால் அது சரிப்பட்டு வருமா.. அப்படிச் செய்தால் தங்கம் விலை குறையுமா.. இந்தக் கேள்வி எல்லோருக்குமே வரக் கூடியதுதான்.
பொருளாதார ரீதியாகப் பார்த்தால் இதில் ஒரு வலுவான லாஜிக் இருக்கிறது. மக்கள் தங்கம் வாங்காமல் ஸ்டிரைக் செய்தால் விலை குறையுமா? என்ற கேள்விக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன.
தேவை மற்றும் விநியோகம்
பொருளாதாரத்தின் அடிப்படை விதியே இதுதான். ஒரு பொருளின் தேவை கிராக்கி அல்லது தேவை குறையும்போது, அதன் விலை குறையத் தொடங்கும். ஒட்டுமொத்த மக்களும் தங்கம் வாங்குவதை நிறுத்தினால், நகைக்கடைகளில் விற்பனை முடங்கும். அப்போது தேக்கமடைந்த நகைகளை விற்கவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் கடைகள் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றைக் குறைக்க முன்வருவார்கள். இது ஓரளவுக்கு விலையைக் குறைக்கும்.
மறுபக்கம், தங்கத்தின் விலை என்பது வெறும் நம் ஊர் மக்கள் வாங்குவதை மட்டும் பொறுத்தது அல்ல. அது உலகளாவிய ஒரு சந்தை. தங்கம் சர்வதேச அளவில் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்யப்படுகிறது. டாலர் வலுவடைந்தால் தங்கம் விலை உயரும்.
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் (நம்முடைய ரிசர்வ் வங்கி உள்பட) டன் கணக்கில் தங்கத்தைச் சேமித்து வைக்கும். அவர்கள் வாங்குவதோ அல்லது விற்பதோ தான் விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. பங்குச்சந்தை வீழ்ச்சியடையும் போது, பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தில் பணத்தைப் போடுவார்கள். இது விலையை ஏற்றும்.
மக்களின் ஸ்ட்ரைக் மாற்றத்தை ஏற்படுத்துமா?
நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியா உலகிலேயே தங்கம் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய மக்கள் தங்கம் வாங்குவதை ஒரு வாரம் நிறுத்தினாலே, உலக அளவில் தங்கத்திற்கான தேவை குறைந்து, சர்வதேச சந்தையில் அதன் விலையில் ஒரு சிறிய அதிர்வை ஏற்படுத்தும்.
சரி இதனால் என்ன நன்மை உண்டு?
இந்தியா அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. நாம் வாங்குவதை நிறுத்தினால் இறக்குமதி செலவு குறைந்து நாட்டின் பொருளாதாரம் மேம்படும். கடைகளில் கூட்டம் குறைந்தால், செயற்கையாக விலையை உயர்த்துவது தடுக்கப்படும்.
தங்கம் விலை ஏறும் போது பயந்து போய் இன்னும் ஏறிவிடுமோ என்று மக்கள் முண்டியடித்து வாங்குவதுதான் விலை இன்னும் உயரக் காரணமாகிறது. மாறாக, அமைதியாகக் காத்திருந்தால், விலை இறங்குவதைத் தவிர்க்க முடியாது.
ஸ்டிரைக் ஐடியா நல்லாத்தான் இருக்கு.. ஆனால் அது சாத்தியமா?

தங்கத்தின் விலை கூடிவிட்டது என்பதற்காக தங்கம் வாங்காமல் இருக்க முடியுமா. மாமன் சீர் செய்யாமல் இருக்க முடியுமா. அல்லது நம்ம ஊரு திருமணங்களில் மொய் தங்கமாக பரிசளிப்பு பரிமாறப்படுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.. அதை மாற்ற முடியுமா. இப்படிப் பல கேள்விகள் உள்ளன.
தங்கம் விலையைக் குறைக்க வேண்டுமானால் நிறைய விஷயங்களில் நாம் மாறியாக வேண்டும். தங்கத்தை வரதட்சணையாக கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் தங்கம் என்ற சுய கட்டாயத்தை தளர்த்த வேண்டும். அதீதமாக தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும். இப்படி அடிப்டையான பல மாற்றங்களை நாம் செய்ய ஆரம்பித்தால்தான் தங்கத்தின் பயன்பாடு குறைந்து, அதன் விலையையும் நம்மால் குறைக்க வைக்க முடியும்.
எதிர்காலத்தில் இதுதான் நடக்கும். அதீதமாக விலை ஏறிக் கொண்டே போனால் அதை வாங்க முடியாத மக்கள் அதை வேண்டாம் என்று ஒதுக்கும் நிலையும் வரலாம் இல்லையா.. அப்படி வரும்போது தங்கத்தின் விலையும் கட்டுக்குள் வரும். ஆனால் ஏறிய எதுவும் இறங்கியதாக சரித்திரம் இல்லை என்பதால் தங்கத்தின் விலையும் வெகுவாக குறையும் என்று நாம் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது என்பதே நிதர்சனம்.
என்ன மக்களே உங்களோட கருத்து என்ன சொல்லுங்க கேட்போம்.
கண்ணதாசனினின் இயேசு காவியம்!
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
குழந்தையின் குறும்பு
பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?
ரோஸ் டே: காதலின் நறுமணம் வீசும் ஒரு தொடக்கம்
Happy Rose Day.. ரோஜா.. ரோஜா..!
காவியக் காதல்!
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?
பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
{{comments.comment}}