தோற்குமா மனிதசக்தி; செயற்கை நுண்ணறிவின் எழுச்சிக் கதை!

Feb 06, 2026,01:06 PM IST

- ஜோபிரபா 


(அத்தியாயம் 1) - ஒரு காலம் கடந்த கனவும்,புதிய அச்சமும்.


மனித மனதின் மிகப் பெரிய கனவுகளில் ஒன்று உண்டு.அதே நேரத்தில் அது கொஞ்சம் அச்சமூட்டுவதும் கூட.

என்னைப் போல சிந்திக்கும்… அல்லது என்னைவிட மேலான ஒரு செயற்கை மனதை நான் உருவாக்க முடியுமா?


இன்று நாம் சொல்லும் செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு புதிய தொழில்நுட்ப சொல்லல்ல. அது நேற்று பிறந்த யோசனையும் அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித சிந்தனையின் ஆழத்தில் மெதுவாக வளர்ந்த ஒரு கனவு அது.


இயந்திரம் சுயமாக இயங்க வேண்டும் என்ற பழைய ஆசை




பண்டைய கிரேக்க காலத்திலேயே, மனிதர்கள் ஒரு விஷயத்தை கனவாகக் கண்டனர். “மனிதன் தொட்டுக்கொண்டே இருக்காமல், ஒரு இயந்திரம் தானாக இயங்கினால்?” அந்த எண்ணத்தில்தான் ஆட்டோமேட்டாக்கள் (Automatons) உருவானது. அதன் அர்த்தமே அழகு.  “தன் சொந்த விருப்பத்தால் இயங்குவது” கி.மு. 400 காலகட்டத்திலேயே, ஒரு இயந்திரப் புறா மனித தலையீடு இல்லாமல் இயங்கியதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.


அது AI அல்ல.ஆனால் AI-க்கு விதைக்கப்பட்ட முதல் சிந்தனை விதை.


20-ம் நூற்றாண்டு கனவு, பொதுப் பேச்சாக மாறிய காலம். பல நூற்றாண்டுகள் வரை இந்த கனவு தத்துவம், கதைகள், மற்றும் கற்பனைகளுக்குள் இருந்தது. ஆனால் 20-ம் நூற்றாண்டில் அது வெளியில் வந்தது. 1921-ல், ஒரு செக் நாடகத்தில் “ரோபோட்” என்ற சொல் முதன்முறையாக பயன்பட்டது. அந்த ஒரு வார்த்தை ஒரு பெரிய கேள்வியை எழுப்பியது.


“ஒரு நாள் இயந்திரங்கள் செயற்கை மனிதர்களாக மாறுமா?” இதன் பிறகு, இந்த கேள்வி விஞ்ஞானிகளிடையே

ஒரு தீவிர விவாதமாக மாறியது. 


செயற்கை நுண்ணறிவு  என்ற பெயர் பிறந்த தருணம்


1955-ல், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் மெக்கார்த்தி ஒரு முக்கியமான சொல்லை உருவாக்கினார். Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு. அதற்கு அவர் கொடுத்த எளிய விளக்கம்


“நுண்ணறிவுள்ள இயந்திரங்களை உருவாக்கும் அறிவியல் மற்றும் பொறியியல்.” அந்த நாள் முதல், மனித கனவுக்கு ஒரு பெயர் கிடைத்தது.


கனவு யார் கைகளில் இருக்கிறது?


ஒரு விஷயத்தை நினைத்துப் பாருங்கள்.ஒரு காலத்தில், ஸ்வஸ்திகா நன்மை, வளம், அமைதி என்பதின் சின்னமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில், அதே சின்னம் பயங்கரத்தின் அடையாளமாக மாறியது. அப்படியானால்…


மனிதனின் இந்தப் பழைய படைப்புக் கனவு

இந்த சக்திவாய்ந்த AI

இறுதியில் யார் கைகளில் இருக்கும்?


இந்தத் தொடர் என்ன பேசப் போகிறது?


இந்த தொடர், AI-யின் பயணத்தை முழுவதுமாகப் பார்க்கும்.


அதன் தத்துவார்த்த தொடக்கம்

விஞ்ஞான வளர்ச்சி

அதிவேக முன்னேற்றம்

நாம் எதிர்கொள்ளும் சவால்கள்

இந்த “புதிய படைப்பு” குறித்த எதிர்கால கேள்விகள்.


எல்லாவற்றையும் சேர்த்த ஒரு விரிவான பயணம் இது. ஏனெனில், ஒரு உண்மை எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். அறிவியலை விட, அதைப் பயன்படுத்தும் மனிதனின் கொள்கைகளே வரலாற்றை எழுதுகின்றன.

பயணம் இங்கிருந்து தான் தொடங்குகிறது…


பயணம் தொடரும்....


(திருவாரூர் அரசுப் பள்ளி ஆசிரியர் ஜோபிரபா என்கிற ச.பிரபாகரன், திருவாரூர் புத்தகத் திருவிழா இலச்சினையை வடிவமைத்தவர். தேனி புத்தகத் திருவிழா ஸ்லோகன் போட்டி மற்றும் 'விஞ்ஞான துளிர்' இதழின் கட்டுரையாளர். மேலும், தமிழ்நாடு அரசின் 'போதையில்லா தமிழ்நாடு', 'சமத்துவம் காண்போம்', 'என் பள்ளி என் பெருமை' போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

அதிகம் பார்க்கும் செய்திகள்