ஹிந்தி, தெலுங்கை தொடர்ந்து..  தமிழிலும்.. என்ட்ரி கொடுப்பாரா.. மிருணாள் தாக்கூர்?

Jan 20, 2024,05:09 PM IST

சென்னை: ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை ஈர்த்துள்ள மிருணாள் தாக்கூர், தமிழிலும் நடிப்பாரா என்ற விறுவிறுப்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


அவரை தமிழுக்கு கொண்டு வர ஒரு முயற்சி நடந்து வருகிறதாம். அதாவது,  சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இது பழமாக முடிந்தால், தமிழிலும் மிருணாள் தாக்கூரை தரிசிக்க ரசிகர்களுக்கு சூப்பரான வாய்ப்பு கிடைக்கும்.


மிருணாள் தாக்கூர்  ஹிந்தி டிவி சீரியல் மூலம் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர். ஹிந்தியில் பல சீரியல்களில் நடித்துள்ளார். பின்னர் 2012 ஆம் ஆண்டு மராட்டி மொழியில் சிறிய கதாபாத்திரத்தில் நாயகியாக வலம் வந்தவர். இதனைத் தொடர்ந்து லைவ் சோனி என்ற பாலிவுட் படத்தில் நடித்து பிரபலமாக அறியப்பட்டார். அதன் பிறகு தெலுங்கில் என்ட்ரி கொடுத்து துல்கர் சல்மான் உடன் ஜோடி சேர்ந்து சீதாராமம் படத்தில் நடித்து அசத்தினார். 




இப்படத்தின் மூலம் இவர் தேசிய அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்தார். தெலுங்கில் இவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் நானியுடன் இணைந்து நடித்த ஹாய் நன்னா திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்தது. இதன் மூலம் தெலுங்கு திரை உலகில் பாப்புலர் நாயகியாக விளங்குகிறார்.


இது மட்டுமல்லாமல் மிமிருணாள் தாக்கூர் சோசியல் மீடியாவில் எப்போதுமே பிசியாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுக்கத் தவறாதவர்.


இந்தி, தெலுங்கைத் தவிர வேறு மொழிப் படங்களில் நடிக்காமல் இருக்கும் மிருணாள் தாக்கூரை தமிழில் நடிக்க வைக்கும் முயற்சிகள் பலித்தால் அவரது நடிப்பு வலை மேலும் விரிவடையும். தமிழில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில்தான் அவருக்கு ஜோடியாக நடிக்க  மிருணாள் தாக்கூரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். 




படக்குழுவினர் இவரை கமிட் செய்ய முயற்சி செய்து வருகிறார்களாம். ஆனால் கால்ஷீட் கைவசம் இல்லாமல் யோசித்துக் கொண்டிருக்கிறாராம் மிருணாள் தாக்கூர். அவ்வளவு பிசியாக இருக்கிறாராம். ஏதாவது வாய்ப்பிருக்கா பாருங்க என்று விடாமல் தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகிறதாம். ஆனால் இன்னும் உறுதியாக முடிவு சொல்லாமல் இருக்கிறாராம் மிருணாள் தாக்கூர் என திரை வட்டாரங்கள் கூறுகின்றன.


பார்க்கலாம்.. மிருணாள் தமிழுக்கு வருவாரா.. தமிழ்த் திரைவானில் மின்னுவாரா என்பதை!

சமீபத்திய செய்திகள்

news

ஞானச்செறுக்கு நிறைந்த.. பாட்டுப் புலவன்.. முண்டாசுக் கவிஞன் .. பாரதியாரின் நினைவு நாள் இன்று!

news

பாமகவின் செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?

news

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!

news

தொடர்ந்து 3வது நாளாக மாற்றமின்றி இருந்து வரும் தங்கம், வெள்ளி விலை.... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 11, 2025... இன்று அன்பு பெருகும்

news

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் பலிகடா ஆக்கப்படுவது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை

news

திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு

news

முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்