ரியாத்: சவூதி அரேபியாவில் வின்டர் எனப்படும் குளிர் காலம் தொடங்கி விட்டது. அந்த நாட்டில் ஆறு மாதம் குளிர்காலம், ஆறு மாதம் வெயில் காலம் என இரண்டே சீசன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அரபு நாடான சவூதி அரேபியாவில் குளிர்காலம் அக்டோபரில் தொடங்கி மார்ச் மாதம் வரை நிலவும். இந்த சமயத்தில் கடும் குளிர் நிலவும். வெயிலை அதிகமாக பார்க்க முடியாது. அதிக அளவிலான மழைப்பொழிவையும் இந்த சீசனில்தான் சவூதி அரேபியர்கள் சந்திப்பார்கள்.
குளிர்காலத்தில் வழக்கமாக ஜெட்டாவில் சராசரியாக 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதுவே ரியாத் என்றால் 14 டிகிரி செல்சியஸாக இருக்கும். அல் டமாம் பகுதியல் 17 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதிகபட்சமாக ரியாத்தில்தான் நல்ல மழை இந்த சீசனில் கிடைக்கும்.
பனி மூட்டம் காலையில் அதிகமாக இருக்கும். இரவில் பனிப்பொழிவும் குளிரும் அதிகமாக இருக்கும். ஜிராஸ், டபுக், ஜபால் அல் லாஸ் போன்ற மலைகள் அடங்கிய பகுதிகளில் பனிப் போர்வை போர்த்தியபடி பார்க்கவே சூப்பராக இருக்கும்.
குளிர்காலத்தில் அதற்கேற்றார் போன்ற அவுட்டிங்குகள் அதிகம் இருக்கும். குறிப்பாக கேம்ப்பிங், மலையேற்றம் உள்ளிட்டவை களை கட்டியிருக்கும். குடும்பத்துடன் இதுபோன்ற முகாம்களுக்குச் சென்று மக்கள் சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்.
அடுத்த ஆறு மாதத்தை குளுகுளுவென வைத்திருக்கப் போகும் குளிர்காலம் தற்போது வந்துள்ளதால் சவூதி மக்கள் ஹேப்பியாகியுள்ளனர். நாம் பார்க்கும் இந்தப் புகைப்படம் அல் கத்தீப் நகரில் எடுக்கப்பட்டது. நமது வாசகர் ஸ்டீபன் சதீஷ்குமார் அனுப்பிய இந்த புகைப்படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
Video: அல் கத்தீப் நகரில் நிலவிய பனி மூட்டம்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
{{comments.comment}}