இலக்கியப்பீடம் சிறுகதைப் போட்டி: செங்கல்பட்டு இரா. கலைச்செல்விக்கு இரண்டாம் பரிசு!

Mar 27, 2026,10:26 AM IST

சென்னை: இலக்கியப்பீடம் மாத இதழ் மற்றும் மாம்பலம் சந்திரசேகர் இணைந்து நடத்திய 2026-ஆம் ஆண்டிற்கான சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 'கௌரவம்' என்ற சிறுகதைக்காகச் செங்கல்பட்டைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி இரண்டாம் பரிசினைத் தட்டிச் சென்றுள்ளார். அவருக்குப் பரிசாக ரூ. 5,000 வழங்கப்பட்டது.


இலக்கிய உலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்து வரும் எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, ‘இலக்கியப்பீடம்’ மாத இதழ் நடத்திய 2026-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.


நமது தென்தமிழ் செய்தி இணையதளத்தின் நீண்டகாலப் பங்களிப்பாளராகவும், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள் எனப் பன்முகத் தன்மையுடன் தொடர்ந்து எழுதி வருபவருமான தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி, செங்கல்பட்டைச் சேர்ந்தவர். இவர் எழுதிய 'கௌரவம்' என்ற சிறுகதை இச்சிறப்பான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இவருக்கு ரூ. 5,000/- ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.




சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. 


கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, முத்தமிழ் விருது, முத்தமிழ் தொலைக்காட்சி விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.




முன்னதாக கலைமாமணி விக்கிரமனின் 98-வது பிறந்தநாள் விழா மற்றும் இலக்கியப்பீடம் இதழின் 30-வது ஆண்டு தொடக்க விழாவுடன் இணைந்து இந்தப் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


சென்னை மேற்கு மாம்பலம், எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்குப் பரிசுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டன.


இப்போட்டியில் 'கரகாட்டம்' சிறுகதைக்காகச் சென்னையைச் சேர்ந்த கோவி. சேகர் முதல் பரிசையும் (ரூ10,000), 'மனி(த)ம்' சிறுகதைக்காகச் சென்னையைச் சேர்ந்த நாராயணி ஜெயஸ்ரீ மூன்றாம் பரிசையும் (கூ3,000) வென்றுள்ளனர்.




நீதியரசர் வி. பவானி சுப்பராயன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், மூத்த எழுத்தாளர் சிவசங்கரி, பேராசிரியர் இராம. குருநாதன், மாம்பலம் ஆ. சந்திரசேகர் மற்றும் கவிஞர் கார்முகிலோன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக எழுத்தாளர் 'ராஜலட்சுமி வேம்பு' அவர்களின் படம் திறந்து வைக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கண்ணன் விக்கிரமன் மற்றும் அரவிந்த் விக்ரம் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு

news

மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?

news

பாட்டியானாலும் பிரச்சினை!

news

"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!

news

புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!

news

நான் கம்ப்யூட்டர் கற்ற கதை

news

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.. அப்படீன்னா அர்த்தம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்