குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்ஃபான்.. சுகாதாரத்துறை நடவடிக்கை பாய்கிறது!

May 21, 2024,04:10 PM IST
சென்னை: தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. இதனால் இர்பானுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

பல்வேறு உணவகங்களுக்குச் சென்று உணவுகளை சுவைத்து அதனை வீடியோவாக யூடியூபில் வெளியிட்டு  பிரபலமானவர் தான் இர்ஃபான்.  சுருக்கமாக சொல்வதானால் "சாப்பாட்டு ராமன்".. சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளிடமும் பேட்டி எடுத்து யூடியூபில் பதிவிட்டும் வருகிறார். நடிகர் நெப்போலியனியன் அமெரிக்க வீட்டுக்கு விஜயம் செய்து இவர் போட்ட வீடியோக்கள் பெரும் வைரல் ஆயின. 

இவருக்கு யூடியூபில் லட்சக்கணக்கான பாலோயர்கள் இருக்கிறார்கள். யூடியூப்பின் மூலம் பிரபலமான இவருக்கு  கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தின் போது மறு வீட்டிற்கு மணப்பெண் வீட்டிற்கு சென்று விட்டு சென்னை திரும்பிய போது இவரது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு விதமாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பின.



இந்நிலையில் சமையல் கலையை மையமாக வைத்து நகைச்சுவை மற்றும் கேளிக்கை நிறைந்த நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பபட்டு வரும் குக் வித் கோமாளி  நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார் இர்ஃபான். இர்பானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை ஒரு பார்ட்டி வைத்து அறிவித்து இருக்கிறார். இந்த விழாவின் இறுதியில், ஸ்கேன்  முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளதாக அறிவித்துள்ளார் இர்ஃபான்.

இந்த அறிவிப்பால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால், அவர் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து இவர் வெளியிட்ட வீடியோவிற்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்ப உள்ளது. மேலும் காவல்துறையிலும் யூடியூபர் இர்பான் மீது புகார் கொடுக்க உள்ளது.

இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை  கண்டறிவது, அதை வெளியில் அறிவிப்பது சட்டப்படி குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

சஞ்சு சாம்சனை பேசாம கேப்டனாக்குங்கப்பா.. செமயா சூப்பரா இருக்கும்.. சொல்கிறார் ஸ்ரீகாந்த்!

news

நான் பிடிவாதக்காரன் கிடையாது...பதவி மீது ஆசை எதுவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

மோடியால் முடியாததை நான் சாதித்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்றெரிச்சல்: முதல்வர் முக ஸ்டாலின்

news

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி.. ஒரு புகாரும் வரவில்லை.. தேர்தல் ஆணையம்

news

தமிழ் வளர்ச்சியில் பெண் கவிஞர்களின் பங்கு!

news

ஹலோ மக்களே.. தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?.. இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க!

news

திருவண்ணாமலைக்கு திடீரென போன லோகேஷ் கனகராஜ்.. கூலி வெற்றிக்காக பிரார்த்தனை!

news

32வது பிறந்த நாளை கொண்டாடும் ஹன்சிகா மோத்வானி.. போராட்டங்களே வாழ்க்கை!

news

புதிய வருமான வரி மசோதா 2025.. திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது

அதிகம் பார்க்கும் செய்திகள்