இந்திய வானிலையை துல்லியமாகக் கணிக்கும் இன்சாட் 3 டிஎஸ் செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட் மாலை 5.35 அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்காக ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
ராஜ் கோட்டில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 122 பந்துகளை எதிர் கொண்டு 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் விளாசி சதம் அடித்தார்.
டெல்லியில் பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் துவங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஜே.பி நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்னர்.
மெட்ரோவில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண் பாதுகாவலர்கள் அடங்கிய பிங்க் ஸ்குவாட் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற 23 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் 1860 425 15 15 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
சாத்தூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிவாரணமும், விபத்தில் காயம் அடைந்தவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்க முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான அறிக்கையை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் முதல்வர்
மு க ஸ்டாலினிடம் வழங்கினார்.
திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறுவதை விட நகைச்சுவை வேறு ஏதும் இருக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கண்டம் தெரிவித்துள்ளார்.
ரூபாய் 732 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய திட்ட பணிகளுக்கு சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நேற்றும் ஒருவரை யானை தாக்கி உயிரிழந்ததை அடுத்து அனைத்துக் கட்சிகள் சார்பாக இன்று அங்கு முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்புப் போராட்டத்தால் கர்நாடகா மற்றும் நீலகிரியில் உணவுப் பொருள் ஏற்றி சென்ற சரக்கு லாரி கூடலூரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த மார்க்கத்தில் இரு மாநில அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை.
சென்னையில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் சேவையில், நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் இந்த நேரத்தில் இயக்கப்படும் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: எம்எல்ஏ அருள்!
முதல்வரே பரந்தூருக்கு செல்லுங்கள்.. இல்லாவிட்டால் மக்களுடன் தலைமைச் செயலகத்திற்கு வருவேன்.. விஜய்
திமுக, பாஜகவிற்கு எதிரானதாகதான் தவெக கூட்டணி இருக்கும்: தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!
2026 சட்டசபைத் தேர்தல்: விஜய்தான் முதல்வர் வேட்பாளர் .. பாஜகவுடன் கூட்டணி கிடையாது.. தவெக அதிரடி!
இனி வரும் நாட்களில் அதிமுக நடத்தும் போராட்டங்களில் பாஜக இணைந்து செயல்படும்: நயினார் நாகேந்திரன்!
தங்கம் விலை நேற்று உயர்ந்திருந்த நிலையில் இன்று குறைந்துள்ளது... எவ்வளவு குறைவு தெரியுமா?...
நீண்ட தாமதத்திற்குப் பிறகு.. இந்தியாவுக்கு வரவுள்ள 6 அமெரிக்க அப்பாச்சே தாக்குதல் ஹெலிகாப்டர்கள்
வெள்ளை உளுத்தம் கஞ்சி (urad dal porridge).. பெண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு
தவெக செயற்குழு கூடுகிறது.. விஜய் சுற்றுப்பயணம் எப்போது.. நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்னென்ன?