சென்னை: எத்தனையோ படிப்பினைகள், நிறைய அனுபவங்கள், பல நினைவுகள், உற்சாகமான தருணங்கள். லியோ என் மனதிற்கு நெருக்கமான படம். லவ் யூ சோ மச் விஜய் சார் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆன படம் லியோ. இந்த படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் நடிகை த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜூன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யு தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
ஆனால் பாக்ஸ் ஆஃபீஸில் அதிரடி காட்டி வசூலை வாரிக் குவித்தது. கிட்டத்தட்ட ரூ.650 கோடிகள் வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது. விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோட் திரைப்படம் கூட, லியோ அளவிற்கு வசூலில் வெற்றி பெறவில்லை. லியோ பட வசூல் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது விஜய் 69 படத்தினை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். மறுபக்கம் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து கூலி படத்தினை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் லியோ படம் வெளி வந்து இன்றுடன் ஒருவருடம் ஆகின்றது. இது குறித்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எத்தனையோ படிப்பினைகள், நிறைய அனுபவங்கள், பல நினைவுகள், உற்சாகமான தருணங்கள். லியோ என் மனதிற்கு நெருக்கமான படம். லவ் யூ சோ மச் விஜய் சார். இந்த வியர்வை மற்றும் ரத்தத்தை செலவழித்த படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}