சென்னை: தமிழகத்தில் இன்று நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மின கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு நாட்களுக்கு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு, அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
3 மாவட்டங்களில் மிக கன மழை
வேலூர், திருப்பத்தூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. இங்கு 15 முதல் 20 செமீ மழை வரை பெய்யலாம் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதேபோல, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை!
27 .9 .2023 மற்றும் 28.9.2023 ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோரம் ,மன்னார் வளைகுடா, குமரி கடல் ,தெற்கு இலங்கை ,கடலோரம் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வேகத்திலும் இடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் லட்சத்தீவு அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும். இதனால் கடல் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் .மேலும் நகரின் புறநகர் மற்றும் மையப் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸ் வெப்பநிலை நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}