சாமோலி, உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றங்கரையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறியதில் 10 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
அலக்நந்தா ஆற்றங்கரையோரம் பிபல்கோட்டி பகுதியில் நீர் மின்சாரத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் முகாம் அமைத்து பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த இடத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
தீயில் கருகிய பலரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீயணைப்புப் படையினரும், மின்சாரத் துறையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஉள்ளதாக சாமோலி போலீஸ் எஸ்பி பர்மேந்திரா தோவல் கூறியுள்ளார். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில டிஜிபி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!
26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!
ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!
திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!
செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்
நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!
Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!
அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?
{{comments.comment}}