திண்டுக்கல்: 2024ம் ஆண்டில் ஜனநாயக கடமையாற்றுவதில் முதியவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சின்னம்மாள் என்ற 102 வயது மூதாட்டி மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த ஜெய்துன்பீ என்ற 102 வயதுப் பாட்டி ஆகியோர் ஜனநாயக கடைமயாற்றி இளம் தலைமுறையினருக்கு மிகப் பெரிய முன்னுதாரணமாக மாறியுள்ளனர்.
இந்தியாவில் 18வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தமிழத்தில் 39 தொகுதிகளும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்தாண்டு குறிப்பாக முதியவர்கள் வாக்கு செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த வயதுடையவர்களே ஓட்டு போட தயக்கம் காட்டி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த 102 வயது மூதாட்டி சின்னாம்மாள் முதல் ஆளாக சென்று தனது ஜனநாயக கடமையைச் செய்தார். இந்த செயலுக்கு இணைய பக்கங்களில் இந்த மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இவரை தொடர்ந்த விழுப்புரத்தில் 102 வயது மூதாட்டி ஜெய்துன்பீ தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். தள்ளாத வயதிலும் ஒருவர் துணையுடன் வந்து தனது வாக்கினை செலுத்தியுள்ளார். இவரது இந்த செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
இவர்கள் மட்டுமல்லாமல் 80 வயதுக்கு மேற்பட்ட பலரும் கூட ஆர்வத்துடன் வந்து வாக்களித்துச் சென்றுள்ளனர். வாக்களிக்கவே போகாமல் வீட்டுக்குள் பலர் முடங்கியுள்ளனர். போகும் சூழல் இருந்தும் கூட போகாமல் பலர் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த மூத்த தலைமுறையினர் மிகப் பெரிய ரோல் மாடல்களாக உள்ளனர். தயவு செய்து உங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துங்கள்.. அது அரசியல் சாசனம் உங்களுக்குக் கொடுத்த மிகப் பெரிய உரிமை.. மக்களே!
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}