சென்னை: தீபாவளித் திருநாளையொட்டி நவம்பர் 9ம் தேதி 10,975 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகை ஐப்பசியில் வரும் அமாவாசை நாளில் கொண்டாடுகிறோம். அம்பாள் நரகாசுரனை வரம் செய்த நாளாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவதால் அன்று லட்சுமியை வழிபடும் தினமாகவும் உள்ளது.
இப்பண்டிகை வாழ்வில் இருளைப் போக்கி, ஒளியை கொடுக்கும் பண்டிகையாக மகிழ்ச்சியை கொடுக்கிறது. அந்நாளில் வீடுகள் தோறும் தீபங்கள் ஏற்றப்பட்டு புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, ஒருவருக்கொருவர் இனிப்புகள் பரிமாறி மிகவும் சிறப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறோம்.

முன்பெல்லாம் சொந்த ஊர்களை விட்டு வெளியேறி வெளியூர்களில் வசித்து வந்தோர் குறைவாக இருந்தனர். ஆனால் இன்று காலம் மாறி விட்டது. சொந்த ஊர்களை விட்டு வெளியூர்களில்தான் பலரும் வசிக்கின்றனர்.. வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தோர்தான் பெரும்பாலானவர்கள்.
தீபாவளி, பொங்கல் திருநாட்களில் குடும்பத்தோடு சொந்த ஊர்களுக்குச் சென்று பண்டிகைகளை இவர்கள் கொண்டாடுவது வழக்கம். இதனால் அந்த சமயத்தில், பஸ், ரயில், விமானம் என எல்லாவற்றிலும் கூட்டம் அலை மோதும். இந்த சமயத்தில் சிறப்புப் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கும் சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது. அக்கூட்டத்தின் முடிவில் வழக்கமான பேருந்துகளோடு (6300 பேருந்துகள்), கூடுதலாக 4675 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 10,975 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டது.
நவம்பர் 9ம் தேதி முதல் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதுதவிர சொந்த ஊர்களுக்குச் சென்றோர் சென்னை திரும்புவதற்கு வசதியாக நவம்பர் 13ம் தேதியும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
சிறப்புப் பேருந்துகள் எங்கிருந்து செல்லும்
சென்னை மாதவரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}