சென்னை:10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழகத்தில் மட்டும் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு 3,302 மையங்களில் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8,11,172 பேர் தேர்வு எழுதினர். இதில் 4,26,821 மாணவிகளும் 3,84,351 மாணவர்களும் அடங்குவர். இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை வெளியாகின.

தமிழகத்தில் மட்டும் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள், மாணவர்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் என்றும், மேலும் இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தும் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் 96.02 சதவீதம் பெற்று முதல் இடத்திலும், ஈரோடு மாவட்டம் 95.56 சதவீதம் பெற்று 2ம் இடத்திலும், திருப்பூர் மாவட்டம் 95.23 சதவீதம் பெற்று 3ம் இடத்திலும் உள்ளன.
11ம் வகுப்பு தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 85.75 சதவீதமும், அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 92.36 சதவீதமும், தனியார் சுயநிதி பள்ளிகள் 98.09 சதவீதமும், இருபாலர் பள்ளிகள் 91.61 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.46 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. வழக்கம் போல இந்த தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}