வக்பு வாரிய சட்ட மசோதாவை திரும்பப் பெறுங்கள்.. தவெக பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள்!

Mar 28, 2025,05:15 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை  தொடங்கினார் நடிகர் விஜய்.  தவெகவின் ஓர் ஆண்டு காலம் நிறைவு  விழா சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அதற்கு முன்னர் தவெக கட்சியின் முதல் மாநாடு மிக பிரமாண்டமாக விக்கிரவாண்டி, வி.சலையில் நடைபெற்றது. இந்நிலையில், இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் தவெக முதல் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தவெக பொதுக்குழுவின் 17 தீர்மானங்கள்:




1. இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.


 2. மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.


3. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க கூடாது.


4. இரு மொழிக் கொள்கையில் உறுதி.


5.  நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை.


6. மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.


7. பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.


8. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.


9. சட்ட ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான திமுக அரசு கண்டனம்.


10. டாஸ்மாக் ரூ.1000 கோடி முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும்.


11. சமூகநீதியை நிலை நிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.


12.  இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பொது வாக்கெடுப்பு ஒரே தேர்வு.


13. பன்னாட்டு அரங்குக்குத் தந்தை பெரியார் பெயரை சூட்டுக.


14. கொள்கைத் தலைவர்கள் வழியில் பயணிப்போம்.


15. தலைவருக்கே முழு அதிகாரம்.


16. கழகப் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.


17. கழகத்திற்காக அயராது பாடுபட்டு மறைந்த கழகச் செயல் வீரர்களுக்கு இரங்கல்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!

news

Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

news

சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!

news

சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!

news

Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!

news

திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்