இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் காலியிடங்கள்

Jun 30, 2023,10:17 AM IST
டில்லி : இந்திய ரயில்வே துறையில் இந்த மாதத்துடன் 2.74 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இதில் ரயில்வே பாதுகாப்பு பிரிவில் மட்டும் 1.7 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய ரயில்வே துறை அளித்த பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக நல ஆர்வலரான சந்திர சேகர் கவுர் என்பவர் தாக்கல் செய்திருந்த கேள்விக்கு தான் இந்திய ரயில்வே பதிலளித்துள்ளது. அதில், குரூப் சி பிரிவில் மட்டும் 2,74,580 பணியிடங்களில் ஜூன் மாத இறுதியில் காலியாக உள்ளது. இதில் பாதுகாப்பு பிரிவில் மட்டும் 1,77,924 பணியிடங்கள் காலியாக போகிறது. 



ரயில்வே பாதுகாப்பு துறையில் மொத்தமுள்ள 9.82 லட்சம் பணியிடங்களில் தற்போது 8.04 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. முக்கிய பணியிடங்களுக்கு பயிற்சிக்கு பிறகு பணி ஒதுக்கீடு மற்றும் பதவி உயர்வு கொடுக்கப்படுவதால் இந்திய ரயில்வேயில் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலிமென்ட்டில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வேயில் கசட்டட் அல்லாத பதவிகளில் 3.12 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்தார். முக்கிய பதவிகளில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பது பற்றி ரயில்வே யூனியன்களும் அடிக்கடி குரல் எழுப்பி வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்