கும்பகோணம்: அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இரண்டு கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காவிரி ஆற்றங்கரையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அருகே மேல காவிரி ஆற்றங்கரையில் இரு உடல்கள் கிடந்தன. பொதுமக்கள் ஆற்றங்கரையில் உள்ள உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் .உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் இவர்கள் இருவரும் இதே பகுதியை சேர்ந்த பாலகுரு மற்றும் சௌந்தர்ராஜ், கூலித் தொழிலாளர்கள் என்று தெரிய வந்தது. நேற்று இரவு இருவரும் சேர்ந்து மது அருந்தியதாக தெரியவந்தது. மேலும் படித்துறையில் உடல்களுக்கு அருகில் சானிடைசர் மற்றும் மது பாட்டில்களும் கிடந்தது.
இருவரும் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிந்தது. இவர்களின் இறப்பிற்கு வேறு காரணம் எதுவும் உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}