உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பாலியல் குற்றத்திற்கு உதவிய சிவா லாட்ஜுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். அந்த சிறுமிக்கு உடலில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக கவலை அடைந்த பெற்றோர், டாக்டர்களிடம் கூட்டிச் சென்று பார்த்தபோது, சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த சிறுமியிடம் விசாரித்ததில், 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியின் தோழியிடமும் பாலியல் வன்கொடுமை செய்தது இருந்தது அம்பலமானது.

இது குறித்து அச்சிறுமியின் உறவினர்கள் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஜெய காளீஸ்வரன், மதன்குமார், பரணி குமார், யுவபிரகாஷ், நந்தகோபால் , பவா பாரதி மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த குற்றவாளிகளின் 6 பேரின் புகைப்படங்கள் கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது.அதன் பின்னர் இந்த குற்றத்திற்கு உதவியதாக சிவா லாட்ஜ் மேனேஜர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அந்த விடுதி மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இன்று சிவா லாட்ஜுக்கு சீல் வைக்கப்பட்டது.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}