பெல்கிரேடு: செர்பியாவுக்கும், குரேஷியாவுக்கும் இடையே ஓடும் தன்யூப் நதிக் கரையையொட்டி உள்ள 125 ஏக்கர் நிலத்தில் ஒரு குட்டி நாடு உருவாகியுள்ளது. இதை உருவாக்கியிருப்பவர் 20 வயதேயான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேணியல் ஜாக்சன் என்ற இளைஞர். உலக அளவில் இது ஹைலைட்டாகி வருகிறது.
வெர்டிஸ் என்ற வனப் பகுதியில் உள்ள இந்த 125 ஏக்கர் நிலமும் யாருக்குச் சொந்தம் என்பதில் செர்பியாவுக்கும், குரேஷியாவுக்கும் இடையே வாய்க்கால் தகராறு இருக்கிறது. இதனால் இந்த இடத்தில் யாரும் வசிக்கவில்லை. இந்த இடமும் அனாமத்தாக கிடக்கிறது. இந்த இடத்தில்தான் தற்போது தனி நாடாக அறிவித்திருக்கிறார் ஜாக்சன்.
இந்த நாட்டுக்கு வெர்டிஸ் குடியரசு என்றும் பெயரிட்டுள்ளார். இங்கு 400 பேர் குடிமக்களாக உள்ளனர் என்றும் கூறுகிறார் ஜாக்சன். அதேசமயம், இந்த குட்டி நாட்டை எந்த ஒரு சர்வதேச நாடும் அங்கீகரிக்கவில்லை, எந்த சர்வதேச அமைப்பும் அங்கீகரிக்கவில்லை. கிட்டத்தட்ட நித்தியானந்தாவின் கைலாசா போலத்தான் இதுவும்.
2019-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி, ஜாக்சன் இந்த இடத்தை 'சுதந்திர குடியரசு வெர்டிஸ்' (Free Republic of Verdis) என அறிவித்தார். இந்த நாட்டுக்கென ஒரு கொடி, அமைச்சரவை, அடிப்படை அரசியலமைப்பையும் ஜாக்சன் உருவாக்கியுள்ளார். இந்த வெர்டிஸ் அரசுக்கென தனியாக இணையதளத்தையும் உருவாக்கியுள்ளார். ஜாக்சன்தான் இந்த நாட்டு அதிபராம். வெளியுறவுத்துறை அமைச்சர் கூட இருக்கிறாராம்.
இதுவரை 400 பேருக்கு இங்கு குடியுரிமை கொடுத்துள்ளனராம். இதுதவிர லாரி லாரியாக அதாவது.. ஆயிரக்கணக்கானோர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வெர்டிஸ் சொந்த பாஸ்போர்ட்டையும் தருகிறதாம். ஆனால் அதை வேறு எங்கும் பயன்படுத்த முடியாதாம்.
ஜனநாயக விழுமியங்கள், இனக்குழுக்களின் நல்லிணக்கம், நவீனமயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதே தனது நாட்டின் முக்கிய நோக்கம் என்று கூறுகிறார் ஜாக்சன். இது ஒரு மைக்ரோநேஷன் என்பதால், எந்தவொரு ஐக்கிய நாடுகள் சபை (UN) உறுப்பு நாடும் அல்லது பிற சர்வதேச அமைப்புகளும் இதை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கவில்லை.
இந்த குட்டி நாட்டை தொடங்கியபோது வெறும் நான்கு பேர்தான் உறுப்பினர்களாக அதாவது குடிமக்களாக இருந்தனர். ஆனால் இப்போது 400 ஆக பெருகியுள்ளதாம். மருத்துவம் மற்றும் காவல்துறை போன்ற அத்தியாவசிய துறைகளில் உள்ள திறன்களைக் கொண்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் வெர்டிஸ் கவனம் செலுத்துகிறது.
குரேஷிய அதிகாரிகள் இந்த மைக்ரோநேஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அக்டோபர் 2023 இல், குரோஷிய காவல்துறை ஜாக்சன் மற்றும் பிற குடியிருப்பாளர்களைக் கைது செய்து, அவர்களை நாடு கடத்தி, அவருக்கு குரேஷியாவுக்குள் நுழைய வாழ்நாள் தடை விதித்தது. இதனால் வெர்டிஸில் தற்போது யாரும் இல்லை. ஜாக்சனும் கூட உள்ளே நுழைய முடியாது. இதனால் அவர் செர்பியாவில் தங்கியிருக்கிறாராம்.
தற்போது, வெர்டிஸ், ஒரு வெளியிலிருந்து இயங்கும் அரசாக (government in exile) இருந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அதன் நிறுவனர் ஜாக்சன், ஒரு நாள் வெர்டிஸ் தனது சுதந்திரத்தை மீண்டும் பெறும் என்று நம்புகிறார்.
Images: verdisgov.org
சாமியார் வேடத்தில் மனைவியைத் தேடி வந்த கணவர்.. அடுத்து நடந்த அதிரடி.. அடக் கொடுமையே!
தமிழ்நாட்டில் தொடரும் மழை... இன்றும் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு... வானிலை மையம்!
நான் உழைத்து உருவாக்கிய கட்சியை கொடுத்து விட்டு டம்மியாக இருக்க முடியாது: டாக்டர் ராமதாஸ்!
இலங்கை படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்
வரலட்சுமி விரதம் 2025.. லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து விரதம் இருப்போம்!
புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரன் ரூ.75,000 கடந்தது
உருவானது வெர்டிஸ் நாடு.. 20 வயது இளைஞரின் அதிரடி.. ஆனால் இது கைலாசா மாதிரி கிடையாது!
Trump Tax: அமெரிக்காவை ஆட்டம் காண வைக்க நம்மால் முடியாதா.. நாம் என்ன செய்ய வேண்டும்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 07, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும் ராசிகள்
{{comments.comment}}